Rajinikanth And Sivakarthikeyan : ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்

  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ படத்தில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் (Rajinikanth And Sivakarthikeyan) வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.
  • இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். லோகேஷ் தற்போது ‘தலைவர் 171’ படத்தில் பிஸியாக வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தலைவர் 170 :

  • ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’ ஆகும். இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. ரஜினிகாந்தின் முழுநீள ஆக்‌ஷன் படமான ‘ஜெயிலர்’ வசூலில் சாதனை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார்.
  • ஜெய் பீம்’ பட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள் :

  • இந்நிலையில், ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்தும், லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளனர். கமல், விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
  • இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரங்களிலும் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth And Sivakarthikeyan :

  • இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் (Rajinikanth And Sivakarthikeyan) வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ரசிகரான எஸ்.கே.நெல்சனின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
  • ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து ‘தலைவர் 171’ படத்தில் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கிறார் (Rajinikanth And Sivakarthikeyan) என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply