Rajinikanth And Vijay Fan Wars : காக்கா கழுகுக்கு ரஜினி முற்றுப்புள்ளி

சூப்பர்ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பற்றி சூப்பர் ஸ்டாரின் பேச்சு சமூக வலைதளங்களில் (Rajinikanth And Vijay Fan Wars) வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு ரஜினி செய்த அட்வைஸ் ஒன்று இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

Rajinikanth And Vijay Fan Wars :

ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொங்கலுக்கு வெளியாகயிருந்த லால் சலாம் படத்தின் வெளியீடு திடீரென தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து ரஜினி பேசியது (Rajinikanth And Vijay Fan Wars) வைரலாகி வருகிறது.

அதில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதை சொன்னது விஜய் மனதில் வைத்து அல்ல என விளக்கம் கொடுத்தார். இந்தக் கதை எனக்கும் விஜய்க்கும் போட்டி என சமூக வலைதளங்களில் வைரலானது. அப்படி ஒன்றும் இல்லை அதை பார்த்ததும் வருத்தமாக இருந்தது. விஜய்யை நான் போட்டியாக நினைத்தால், அது எனக்கு மரியாதை கிடையாது. அதேபோல் விஜய் என்னை போட்டியாளராக பார்த்தால் அது அவருக்கும் மரியாதை கிடையாது என பஞ்ச் வைத்தார். விஜய்யின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய ரஜினி, அவருக்கு அறிவுரை வழங்குவது குறித்தும் பேசினார். அதாவது நான் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் படப்பிடிப்பு விஜய் வீட்டில் நடந்தது. அப்போது விஜய்க்கு 13 வயது, அவர் நடிக்க ஆசைப்படுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் கூறினார். உடனே நான் முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். பிறகு செயல்படுங்கள் என்று அறிவுரை கூறினேன்.

அதன்பின்னர் அவராக கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்துள்ளார். தற்போது விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என ரஜினி பேசியது (Rajinikanth And Vijay Fan Wars) ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறினார். அப்போது சமூக வலைதளங்களில் தொடங்கிய ரஜினி-விஜய் மோதல் விஸ்வரூபம் எடுத்தது. விஜய்யும் லியோ இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி சொன்னது ரஜினியை தாக்கியது போன்றே இருந்தது. முக்கியமாக அசோசியேட் டைரக்டர் ரத்னகுமார் லியோ மேடையில் சொன்ன கழுகு கதை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கெல்லாம் சேர்த்து தற்போது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி முடிவு காட்டியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply