Rajinikanth Birthday Special : லால் சலாம் ட்ரெய்லர், தலைவர் 171 டைட்டில் ரெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படம் 2024 பொங்கல் அன்று வெளியாக உள்ளது. அதே நேரத்தில் ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்களில் இருந்து ஒரு மாஸ் அப்டேட் (Rajinikanth Birthday Special) வெளியாகவுள்ளது.

Rajinikanth Birthday Special - ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் :

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி, லைக்கா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அதன்படி ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல் த.செ.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்திலும் நடித்து வருகிறார்.

அதன்படி லால் சலாம், தலைவர் 170 ஆகிய 2 படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து லால் சலாம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. முன்னதாக இந்த படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இதையடுத்து லால் சலாம் படத்தின் ட்ரெய்லரும் (Rajinikanth Birthday Special) வெளியாகவுள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் இசை வெளியீட்டு விழாவை நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் (Rajinikanth Birthday Special) என்றும் கூறப்படுகிறது. த.செ.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170 படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு வேட்டையன் என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைவர் 170 அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தலைப்பு தற்போது அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே ரஜினியின் தலைவர் 171 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இணைகின்றனர் என்பதை தவிர தலைவர் 171 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும்  வெளியாகவில்லை. இந்நிலையில் தலைவர் 171 படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் (Rajinikanth Birthday Special) என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply