Rajinikanth Congratulated Vijayakanth : விஜயகாந்தை போல் இனி யாரையும் பார்க்க முடியாது
மத்திய அரசின் பத்ம பூஷன் விருது பெற்ற மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து (Rajinikanth Congratulated Vijayakanth) தெரிவித்துள்ளார்.
நடிகரும், தலைவருமான விஜயகாந்த் :
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும், பின்னர் தீவுத்திடலில் வைக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த வந்தனர். டிசம்பர் 29 அன்று மாலை, அவரது உடல் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஏராளமானோர் தொடர்ந்து சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மணிமண்டபம், சிலை அமைக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
Rajinikanth Congratulated Vijayakanth :
நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை தேமுதிக பொதுச்செயலாளரும், மனைவியுமான பிரேமலதா கடந்த 9 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார். சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் நினைவிடத்தில் பூஜை செய்து, பத்மபூஷன் விருது மற்றும் பதக்கத்தை கண்ணீர் மல்க வைத்தார். இந்நிலையில் பத்ம பூஷன் விருது பெற்ற மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து (Rajinikanth Congratulated Vijayakanth) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய அருமையான நண்பர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமல்லாமல் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் புத்தகத்தில் அவரது வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். இது அவருடைய பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென்று தோன்றி, பல சாதனைகளை நிகழ்த்தி மறைந்தார். விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்க முடியாது. நான் அவரை மிகவும் இழக்கிறேன். “மதுரையில் பிறந்த மதுரை மாவீரன் கேப்டன் விஜயகாந்த்” என்று வீடியோவில் ரஜினிகாந்த் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Slideshows
-
Vidaamuyarchi Release Date Update : விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு
-
Jayam Ravi Separated From His Wife : ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிந்தார்
-
கன்னியாகுமரியில் Stainless Steel Glass Bridge - ரூ.37 கோடி மதிப்பீட்டில்
-
Nuclear Power Plant On Moon : நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் இந்தியா இணைந்தது
-
3 New Electric Train Services In Chennai : சென்னையில் புதிதாக 3 மின்சார ரயில் சேவைகள்
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்