Rajinikanth Congratulates Karthik Subbaraj : கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி பதில்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பாராட்டி அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் (Rajinikanth Congratulates Karthik Subbaraj) எழுதியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படத்தை ஸ்டோன் பென்ஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன் 2014ல் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்த ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

Rajinikanth Congratulates Karthik Subbaraj :

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம் (Rajinikanth Congratulates Karthik Subbaraj) எழுதியுள்ளார். ஜிகர்தண்டா XX படம் ஒரு குறுஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான கதைக்களம், அற்புதமான படைப்பு ஆகும். சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத புதிய காட்சிகள். ‘லாரன்ஸால்’ இப்படி நடிக்க முடியுமா? என்று நம்மை வியக்க வைக்கிறது. எஸ்.ஜே.சூர்யா உலக நடிகன், வில்லத்தனம் நகைச்சுவை ஆகியவற்றை கலந்த அசத்தினார். கலை இயக்குநரின் பணி பாராட்டுக்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அற்புதம். வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னன் ‘சந்தோஷ் நாராயணன்’. படத்தை இசையால் உயிர்ப்பித்து, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார்.

இந்த படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள். படத்தில் வரும் பழங்குடியினர் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுக்கு போட்டியாக யானைகளும் நடித்து இருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறது. அழ வைக்கிறது. “I Am Proud Of  You கார்த்திக் சுப்புராஜ். My Hearty Congratulations To கார்த்திக் சுப்புராஜ் And Team” என்று ரஜினிகாந்த் தனது கடிதத்தில் (Rajinikanth Congratulates Karthik Subbaraj) குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி பதில் :

ரஜினிகாந்த் படக்குழுவினரை வாழ்த்தியதை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி (Rajinikanth Congratulates Karthik Subbaraj) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், “உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தலைவா. நீங்கள் எங்களுடன் நடத்திய ஒரு மணி நேர உரையாடல் எனக்கும் எங்கள் குழுவிற்கும் நேர்மறையான மனநிலையை அளித்துள்ளது. எங்கள் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவினரிடமிருந்து உங்களுக்கு நிறைய அன்புகள் தலைவா” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply