Rajinikanth Invited To Ram Temple Inauguration : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு தனிப்பட்ட முறையில் ஸ்ரீராம ஜன்மபூமி அறக்கட்டளை மூலம் அழைப்பு (Rajinikanth Invited To Ram Temple Inauguration) விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் இருந்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அழைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 5, 2020 அன்று அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் முடிந்து ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். அன்று மதியம் 12.45 மணிக்கு கோவிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்படுகிறது. “பகவான் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் திறப்பு விழாவின் போது, ​​கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவுகிறார். கோவில் கும்பாபிஷேகத்திற்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 பக்தர்கள் தவிர மேலும் 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர, இந்து மதத் தலைவர்கள், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Invited To Ram Temple Inauguration :

Rajinikanth Invited To Ram Temple Inauguration : இந்நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ்.தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், தென் பாரத மக்கள் தொடர்பு செயலாளர் பிரகாஷ், மாநில இணை செயலாளர் ராம ராஜசேகர், மாநகர பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக, சமூக வலைதள பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கியுள்ளனர். இதை பெற்றுக்கொண்ட ரஜினி, கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வேன் என்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தி சென்று அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தை சுற்றி பார்த்தார். அருகில் உள்ள அனுமன் கோவிலில் வழிபாடு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, அயோத்தியில் ராமரை தரிசனம் செய்ய பல வருடங்களாக காத்திருந்தேன், தற்போது அது நிறைவடைந்துள்ளது, ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு மீண்டும் வருவேன் என்றார்.

பிரபலங்கள் பங்கேற்பு :

கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், இந்து மதத் தலைவர்கள், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply