Rajinikanth Latest Tweet : அமிதாப் பச்சன் குறித்து ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு

Rajinikanth Latest Tweet :

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’ ஆகும். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில், சுனில், மோகன்லால், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பான் இந்தியா படமாக உருவான இப்படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசைமைத்துள்ளார்.

Rajinikanth Latest Tweet : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்பட்டது. ரஜினியின் அனுமதியுடன் மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்ல அமிதாப் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டதாக தமிழ் திரையுலகில் ஒரு பேச்சு சொல்லப்பட்டது. ரஜினி-அமிதாப் ஜோடி சேர்வது நிச்சயம், கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 1991ஆம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் ‘ஷும்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். அதன் பிறகு இந்த கூட்டணி அமையவே இல்லை. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 170வது படமான இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதனிடையே அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

Rajinikanth Latest Tweet : இதில் அங்கு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. வரும் 28ம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறும். அமிதாப் பச்சனுடனான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினிகாந்த் (Rajinikanth Latest Tweet), “33 ஆண்டுகளுக்குப் பிறகு, லைகா தயாரிப்பில் டி.எஸ்.ஞானவேல் இயக்கும் எனது 170வது படத்தில் எனது வழிகாட்டியும் ஆளுமையுமான அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறேன். என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply