Rajinikanth Leave For Ayodhya : ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள (Rajinikanth Leave For Ayodhya) புறப்பட்டார். ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு அயோத்தி விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, அயோத்தியில் மசூதி இருந்த நிலம் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இடிக்கப்பட்ட மசூதிக்கு மாற்றாக 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராமர் கோவில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ராமர் கோவில் திறப்பு விழா நாளை (ஜன. 22) நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Rajinikanth Leave For Ayodhya :

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் திருவிழாவிற்கு செல்ல அனைவரும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth Leave For Ayodhya) அயோத்திக்கு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்தி புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply