Rajinikanth Praised Sivakarthikeyan : சிவர்கார்த்திகேயனை பாராட்டிய ரஜினிகாந்த்

சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு வெளியானது. தற்போது தெலுங்கில் நேரடியாக வெளியாகியுள்ள அயலான் திரைப்படம் டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் அயலான் படத்தை பார்த்து ரஜினி கூறியது (Rajinikanth Praised Sivakarthikeyan) குறித்து சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார்.

அயலான் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  வெளியானது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 2018 இல் தொடங்கப்பட்ட அயலான் பல தடைகளைத் தாண்டி தற்போது வெளியாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அயலானை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். இது ஏலியன்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அறிவியல் புனைகதை படமாகும். இதன் மூலம் அயலான் பாக்ஸ் ஆபிஸில் ரூ.75 கோடியை தாண்டியுள்ளது. அயலான் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் நேரடியாக வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற அயலான் தெலுங்கு வெளியீட்டு விழாவின் ப்ரீ ரிலீஸ் விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

Rajinikanth Praised Sivakarthikeyan - ரஜினிக்கு ரோல் மாடலான சிவகார்த்திகேயன் :

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், அயலான் படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டியதையும் (Rajinikanth Praised Sivakarthikeyan) அங்கு குறிப்பிட்டிருந்தார். “அயலான் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சார் ரொம்பவே பாராட்டினார். மேலும், நீங்கள் எப்படி புது வகைப் படங்களில் நடிக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ரஜினியின் எந்திரன் மற்றும் 2.O ஆகிய படங்கள்தான் அயலனுக்கு இன்ஸ்பிரேஷன் என்றுள்ளார். ஆனால், அயலான் படம் பின்னர் நீங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். அயலான் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியது அங்குள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மேலும், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் அவரது மகன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் வசந்த் ரவி ரஜினியின் மகனாக நடித்தார். அதேபோல நெல்சன் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தில் சிவா நடிக்கலாம் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதுகுறித்து எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் அயலான் படத்தை பார்த்த ரஜினி, சிவகார்த்திகேயனை பாராட்டியது (Rajinikanth Praised Sivakarthikeyan) ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply