Rajinikanth Will Soon Construct A Hospital : மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த் | ஏழைகளுக்கு இலவசம்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் (Rajinikanth Will Soon Construct A Hospital) தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கிய தனது திரையுலக வாழ்க்கையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமான காலத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தார். தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரஜினிகாந்த் ரூ.80 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் ரூ.40 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களா வைத்துள்ளார். இந்த வீட்டைத் தவிர சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையும் ரஜினி நடத்தி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவிலும் வீடுகள் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தற்போது பிஸியாக உள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக வெளியான அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தையே பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Rajinikanth Will Soon Construct A Hospital :

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் மருத்துவமனை கட்டப் போவதாக (Rajinikanth Will Soon Construct A Hospital) கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்து வருகிறது. ஓஎம்ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தை ரஜினிகாந்த் வாங்கியதாக தெரிகிறது. திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பத்திரப் பதிவு நடந்ததாகவும் கூறப்படுகிறது. 12 ஏக்கரில் கட்டப்படும் இந்த மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Rajinikanth Will Soon Construct A Hospital) ரஜினி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply