Rajinikanth Wishes Leo : லியோ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

Rajinikanth Wishes Leo :

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் அழைத்து, லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து (Rajinikanth Wishes Leo) தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்களைத் தாண்டி தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்திருக்கிறது. ஏனெனில் இந்த படத்தை மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மனோபால், பாபு ஆண்டனி, மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் அழைத்து, லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தினார். சமீபகாலமாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் பட்டம். தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று விஜய் ரசிகர்களும், எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் அவர் ரஜினி மட்டும் தான் என்று ரஜினி ரசிகர்களும் கூறி வருகின்றனர். மேலும், விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்திய ஜெயிலர் படத்தின் ஹூக்கும் பாடல் வரிகள் எல்லையற்றதாகி வருகிறது.

என்னதான் ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல்கள் இருந்தாலும், தளபதியும், தலைவரும் எப்போதும் நட்புடன் இருக்கின்றனர். ரஜினிக்கு விஜய் மீதுள்ள பாசமும், ரஜினி மீதான விஜய்யின் மரியாதையும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று மற்றவர்கள் சொல்லும்போதே தெரிகிறது. அந்த வகையில் லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து (Rajinikanth Wishes Leo) தெரிவித்துள்ளார். லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதனால், ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்த லோகேஷ் கனகராஜை அழைத்து ரஜினிகாந்த், ‘லியோ திரைப்படம் வெளியாகிறது, படம் வெற்றியடை வாழ்த்துக்கள் லோகேஷ்’ (Rajinikanth Wishes Leo) என்று கூறியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply