Rajinikanth's 73rd Birthday Celebration : குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்

Rajinikanth’s 73rd Birthday Celebration : நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்தநாள் விழாவை குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த், தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் :

நடிகர் ரஜினிகாந்த் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர். சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படுபவர். தற்போதைய தலைமுறையை தனது ஸ்டைலால் கொண்டாட வைத்து வருபவர். இன்றைய தினம் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த், தனது ஹீரோ இமேஜை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். 1975ல் தொடங்கிய அவரது திரைப்படப் பயணம் ஹீரோவாக மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் தொடர்கிறது. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் காட்டியது. 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்திலும் ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் & ரசிகர்கள் :

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களிலும் நேரிலும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இன்று காலை அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் ஆகியோரும் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் மூலம் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரஜினிகாந்த் இந்த ஆண்டை ஜெயிலருடன் இணைந்து மறக்க முடியாததாக்கியுள்ளதாக நெல்சன் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து ரஜினி தனது நடிப்பால் அனைவரையும் உற்சாகப்படுத்த வேண்டும் என லோகேஷ் கனகராஜ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோரும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் சர்வதேச அளவில் பல பிரபலங்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Rajinikanth's 73rd Birthday Celebration - குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம் :

Rajinikanth’s 73rd Birthday Celebration : இந்நிலையில், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவர் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் சௌந்தர்யாவின் கணவர் மற்றும் பேரன்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply