Ram Charan-Upasana Blessed Baby Girl: திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றெடுத்த ராம் சரண் தம்பதிகள்

RRR ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா சமீபத்தில்  தங்களது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமான  முறையில் தங்கள் முதல் குழந்தை பெயரிடும் விழாவை நடத்தினர்.

RRR ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா இருவரும் சிறு வயது முதல் ஒரே பள்ளியில் படித்து பழகி வருகின்றனர். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே பல முறை சந்தித்து தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர்.

எத்தணை கோடி செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் என்பதுதான் முதல் செல்வமாக போற்றப்படுகிறது. குடும்ப வாரிசு தழைக்க பேர் சொல்ல ஒரு பிள்ளை தேவைப்படுகிறது. இது RRR ராம் சரண், அவரது மனைவி உபாசனா வாழ்க்கையிலும்  மற்றும்  நடிகர் சிரஞ்சீவி குடும்பத்திலும் ஒரு குறையாக இருந்தது

திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு  தற்போது குழந்தை பிறந்து உள்ளது. மிஸ் உபாசனா காமினேனிக்கும் ராம் சரண் கொனிடேலாவுக்கும்  ஹைதராபாத் -ஜூப்ளி ஹில்ஸ் அப்போலோ மருத்துவமனையில்  ஜூன் 20, 2023  அன்று பெண் குழந்தை பிறந்தது.

பிரமாண்டமான முறையில் குழந்தை பெயரிடும் விழா

உபாசனா  தனது கர்ப்பம் பற்றிய சமீபத்திய ஒரு உரையாடலில், “நான் கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண்டம் சொன்னபோது, உடனே ​​​​அவர், ‘அதிக அளவில் இப்போது உற்சாகமடைய வேண்டாம், எல்லா  சோதனைகளையும் செய்வோம், தற்போது அமைதியாக இருப்போம் ‘ என்று  என்னிடம் கூறினார்.  தேவையான அத்தனை  சோதனைகளையும் செய்து முடிவுகளும் நன்றாக அறிந்த பின்புதான் அவர் உற்சாகமாக  கொண்டாடினார். ராமைப் பற்றி நான் மிகவும் பெருமை கொள்வது மற்றும் போற்றுவதும் அதுதான். ராம் சரண் என் வாழ்க்கையில் ஒரு அமைதியான காரணி ஆவார், நான் என் உணர்வுகளை மிகவும் உற்சாகமாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.  ஆனால் அவர் அதை தனது சொந்த வழியில் மிகவும் அமைதியாக செய்கிறார்.” என்றார்.

அவர்களது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமான  முறையில் தங்கள் முதல் குழந்தை பெயரிடும் விழாவை நடத்தினர். தங்கள் பிறந்த குழந்தைக்கு மனித கடத்தலில் இருந்து தப்பியவர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைத் தொட்டிலை முதலில் வாங்கினர். ராம் சரணின் குட்டிக்காக RRR பாடகர் கால பைரவா ஒரு சிறப்பு மற்றும் அர்த்தமுள்ள பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார்.

அவர்களது  குடும்பத்தினர் தாத்தா சிரஞ்சீவி ( ராம் சரணின் தந்தை ), அவரது மனைவி மற்றும் உபாசனாவின் பெற்றோர்களான அனில் காமினேனி, ஷோபனா காமினேனி, ராம் சரணின் சகோதரிகள் சுஷ்மிதா, ஸ்ரீஜா, நிஹாரிகா கொனிடேலா  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைக்குப் பெயர் கிளிங்காரா

ராம் சரணின் மனைவி ஷோபனா தனது சமூக ஊடகக் கணக்கில் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவின் படங்களைப்  பகிர்ந்து, “ குழந்தைக்கு கிளிங்காரா என்று பெயரிட்டு,  இவள் எங்களின் அன்பின் மிகச் சிறந்த குழந்தையாக  மற்றும் இவள் எங்களின் எதிர்கால மாற்ற ஆற்றலாக இருப்பார். நாங்கள் குழந்தை கிளிங்காராவை  காதலிக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை ராம் சரணின் தந்தையும், டோலிவுட் மூத்த நடிகருமான சிரஞ்சீவி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.  நடிகர் சிரஞ்சீவி தனது அறிக்கையில் குட்டி மெகா இளவரசியை வரவேற்பதாகவும், அவள்  ராம் சரன் , அவரது மனைவி உபாசனா காமினேனிகொனிடேலாயை பெற்றோராகவும், எங்களை  தாத்தா பாட்டிகளாக மாற்றியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளதாக  கூறினார்.

பின்னர் நடிகர் சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் பேசிய போது பெண் குழந்தையின் வரவு ஆனது  எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  குடும்பத்தினர் நாங்கள் முழு மகிழ்ச்சியில் உள்ளோம். 11 வருடங்களாக நாங்கள் ராம் சரண் மற்றும் உபாசனா பெற்றோராக வேண்டும் என்று விரும்பி வந்த நேரத்தில் எங்களுக்கு பிடித்த நாளான செவ்வாய்கிழமை. பெண் குழந்தை மங்கள நேரத்தில் நல்ல ஜாதகத்துடன் பிறந் திருப்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் எங்களது பேத்தியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த நேரத்தில் ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

நடிகர் ராம் சரண் தங்கள் மீது அன்பைப் பொழிந்த அனைவருக்கும் மற்றும் குழந்தையின் நலனுக்காக பூஜைகள், பிரார்த்தனைகள் செய்ததற்காகவும்  ரசிகர்களுக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக கூறினார். புதிய தந்தை நடிகர் ராம் சரணனின் பதில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா அவர்கள் தங்கள் மகள் நடிகர் சிரஞ்சீவி தாத்தா பாட்டியின் அரவணைப்பில் ஜூபிலியில் உள்ள அவர்களது வீட்டில் வளர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தனர்.

Latest Slideshows

Leave a Reply