Ramadan 2024 : ரமலான் பண்டிகையின் வரலாறும், முக்கியத்துவமும்

இஸ்லாமிய நாள்காட்டியின் படி இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதமாக ரமலான் உள்ளது. இம்மாதத்தில் தான் புனித குர்ஆன் முஹம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் கூறுகின்றன. ரம்ஜான், ரமலான் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த பண்டிகை ஈதுல் ஃபித்ர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்காட்டி சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ரமலான் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். ரமலான் மாதம் முழுவதும், சூரிய அஸ்தமனம் வரை ஒவ்வொரு நாளும் நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. பிறை தென்பட்ட 30வது நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரமலான் நோன்பு :

முஸ்லிம்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் மாதங்களைக் கணக்கிடுகின்றனர். ரம்ஜான் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதமாகவும், பல நன்மைகள் நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாமிய நாள்காட்டியின் 9வது மாதம் ரமலான் நோன்பு தொடங்கப்படுகிறது. நோன்பு சில நாடுகளில் நேர வேறுபாடுகளுடன் தொடங்குகிறது, இது சந்திரனின் உதயத்துடனும், பிறை சந்திரனைப் பார்ப்பதுடனும் ஒத்துப்போகிறது. 30 நாட்கள் நோன்பு இருந்து வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். ரம்ஜான் எனப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ரமலானின் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்துள்ளன. முஸ்லிம்களின் 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு என பல முஸ்லிம் சாட்சிகள் கூறியுள்ளனர்.

நோயுற்றவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் நோன்பு கடமையாகும். மாதவிடாய் தவிர மற்ற நாட்களில் பெண்கள் நோன்பு நோற்பது கடமையாகும். நோன்பின் போது ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம். நோன்பு இருப்பவர்கள் ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். நோன்பு நேரத்தில் அசிங்கமாக பேசவோ, பொய் சொல்லவோ, பிறருக்கு துன்பம் தரவோ, புண்படுத்தும் வகையில் பேசவோ கூடாது. ஆண்டின் 365 நாட்களும், ஒரு அரை-பொருள் நிலையமாக நிகழும் மனிதனின் உடல், நோன்பு எனப்படும் 30 நாள் விரதத்துடன் ஓய்வெடுக்கிறது. இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும். ரமலான் மாதத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஆகும்.

ரமலான் பண்டிகையின் சிறப்புகள் :

  • ரமலான் மாதத்தின் முதல் நாள் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு நோற்று வரும் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஜகாத் எனும் உதவியை வழங்க வேண்டிய மற்றொரு கடமையும் அவர்களுக்கு உள்ளது. ரமலான் பண்டியாகையானது 30 நாள் நோன்பு முடிந்த முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
  • இதற்காக அதிகாலையில் தொழுகையை முடித்துவிட்டு புதிய ஆடை அணிந்து ஈதுல் பித்ர் சிறப்பு தொழுகையில் பங்கேற்கிறார். பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி மைதானங்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால், பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்வெளிகளிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தப்படும்.
  • பிரார்த்தனைக்குச் செல்வதற்கு முன் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். ரமலான் மாதம் நன்மையை மட்டும் போதிக்கவில்லை. ஒற்றுமையையும் போதிக்கின்றது. இந்த தினத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர்.
  • ரமலான் தினத்தன்று நோன்பு இருக்கக்கூடாது, ஒரு மாதத்தில் விடுபடும் நோன்புகளை ரம்ஜான் பெருநாளை பிறகு வரும் அடுத்த ஆறு நாட்களில் நோன்பு இருந்து கொள்ளலாம். அனைத்து விதமான வாழ்க்கை முறைகளையும் அறிந்து உணர்ந்தால் இறைவனை அணுகலாம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

Ramadan 2024 - 2024ல் ரமலான் பெருநாள் :

ரமலான் தினமானது சந்திர இயக்கத்தின் அடிப்படையில் பிறை பார்க்கப்பட்டு (Ramadan 2024) கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ரமலான் பண்டிகையை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வாழ்த்துக்கள்.

Latest Slideshows

Leave a Reply