Ramadan Fasting 2024 : தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும் (Ramadan Fasting 2024) என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடும் முன், இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். முஸ்லிம்கள் இந்த நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அல்லாஹ்வின் கருணையைப் பெறவும் அனுசரிக்கிறார்கள்.

இந்த நோன்பு காலத்தில் அவர்கள் அதிகாலையில் சாப்பிட்டு நாள் முழுவதும் அதாவது சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த நோன்பைப் பின்பற்றுகின்றனர். அதன்படி சூரிய உதயத்திற்கு முன் உணவு சாப்பிட்டு, நாள் முழுவதும் உணவு, தண்ணீர் அருந்தாமல் நோன்பு இருந்து, மாலையில் சூரிய மறைவிற்கு பிறகு நோன்பை முடித்து உணவு எடுத்துக்கொள்வார்கள். பிறை கணக்குப்படி 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் நோன்பு இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் வானில் பிறை தென்பட்டவுடன் இந்த நோன்பு காலம் தொடங்கும்.

Ramadan Fasting 2024 :

  • அதன்படி நேற்று பிறை தென்பட்டால் இன்று முதல் ரமலான் நோன்பு (Ramadan Fasting 2024) என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ரமலான் மாதத்தில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் என்றும், நரகத்தின் கதவுகள் மூடப்படும் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். மேலும் இந்த ரமலான் மாதம் குர்ஆனை நினைவு கூறுவது மட்டுமின்றி, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, அல்லாஹ்வுடன் பிணைப்பை வலுப்படுத்துவது, ஆன்மாவை தூய்மைப்படுத்துவதற்கான நேரமாகவும் கருதப்படுகிறது.
  • இந்த நோன்பு காலத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பாலூட்டும் பெண்கள், உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பருவமடையும் குழந்தைகளுக்கு நோன்பு நோற்பது கட்டாயமில்லை. அதேபோல, மிகவும் வயதான பெரியவர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Latest Slideshows

Leave a Reply