Ramadan Fasting Starts Tomorrow In India : இந்தியாவில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் வசிக்கும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை பிறை தெரிவதன் அடிப்படையிலேயே (Ramadan Fasting Starts Tomorrow In India) முடிவு செய்யப்படுகிறது. உலகில் அனைத்து பகுதிகளிலும் எப்போது பிறை தெரிகின்றதோ அதை வைத்துதான் நோன்பு தேதி மற்றும் பண்டிகை கொண்டாடப்படும். மேலும் இந்த தேதி ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒருநாள் வரை மாறுபடும். அந்த வகையில் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று (மார்ச் 01) பிறை தென்பட்டதால் நாளை முதல் ரமலான் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பிறை தெரியாததால் ரமலான் மாதம் நாளை (மார்ச் 02) தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பு

ரமலான் மாதமும், ரமலான் நோன்பும் மற்றும் ரம்ஜான் பண்டிகையும் பிறை தெரிவதன் அடிப்படையில் தலைமை ஹாஜியால் முடிவு செய்யப்படுகிறது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பிறை (Ramadan Fasting Starts Tomorrow In India) தெரிகிறதோ அதை வைத்தே நோன்பு தொடங்கும் தேதியும் பண்டிகையும் கொண்டாடப்படும். இதனால் ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை வித்தியாசத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பு உள்ளது. இந்த சமயத்தில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் என எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள்.

சவூதியில் தென்பட்ட பிறை

Ramadan Fasting Starts Tomorrow In India - Platform Tamil

இன்று ஹிஜ்ரி 1446 ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை சவூதி அரேபியாவில் உள்ள சுதைர் மற்றும் துமைர் ஆய்வகங்களில் தென்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ரமலான் புனித மாதம் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்த நிலையில் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள (Ramadan Fasting Starts Tomorrow In India) முஸ்லிம்கள் தங்கள் தராவீஹ் தொழுகையையும் இன்று மார்ச் 1 (சனிக்கிழமை) முதல் நோன்பு இருக்கவும் தொடங்கியுள்ளனர். சவூதி அரேபியாவில் ரமலான் தொடங்கிய நிலையில், கத்தார், ஐக்கிய அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட  நாடுகளும் இதையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எப்போது பிறை தெரியும் (Ramadan Fasting Starts Tomorrow In India)

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்று பிறை தெரியவில்லை. இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் நோன்பு மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகம்மது அய்யூப் அவர்கள் (Ramadan Fasting Starts Tomorrow In India) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதம் 28-02-2025 தேதி ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. இதனால் மார்ச் மாதம் 02- தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ‘ஷபே கத்ர்’ மார்ச் 27-ம் தேதி வியாழக்கிழமை மற்றும் மார்ச் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply