Ramnath Goenka Excellence In Journalism Awards : Gurinder Osan “Ramnath Goenka Excellence In Journalism Awards” பெற்றார்

Ramnath Goenka Excellence In Journalism Awards – Gurinder Osan, PTI photo editor for photojournalism பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் (Ramnath Goenka Excellence In Journalism Awards) வழங்கப்படுகின்றது. புதுதில்லியில் மார்ச் 19, 2024, செவ்வாய்கிழமை நடைபெற்ற விழாவின் போது, ​​மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகைக்கான ராம்நாத் கோயங்கா விருதை, புகைப்பட இதழியலுக்கான PTI புகைப்பட ஆசிரியர் குரிந்தர் ஓசனுக்கு வழங்கினார். பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகை விருதுகள் ஆனது வழங்கப்படுகிறது.

ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் - ஒரு குறிப்பு

ராம்நாத் கோயங்கா 1932ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தினை நிறுவி அதன் தலைவராக செயலாற்றினார். இந்த ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் ஆனது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராம்நாத் கோயங்காவின்  நினைவாக வழங்கப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆனது ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகை விருதுகளை  (Ramnath Goenka Excellence In Journalism Awards) அதன் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நிறுவியது. இந்த விருதுகள் 2006 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதுகள் ஆனது அச்சு இதழியல் மற்றும் ஒளிபரப்பு  இதழியல் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படுகின்றன. இந்த ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகை விருதுகள் ஆனது பத்திரிகையாளர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து, அவர்களின் சிறந்த பங்களிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சு/டிஜிட்டல் மற்றும் பிராட்காஸ்ட் பத்திரிகையாளர்கள் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை பெருமளவில் எதிர்கொள்கின்றனர். அப்படி இருந்தபோதும் தங்களது தரத்தை மிக உயர்ந்த அளவில் பராமரித்த அச்சு/டிஜிட்டல் மற்றும் பிராட்காஸ்ட் பத்திரிகையாளர்களுக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆனது விருதுகள் வழங்கி மகிழ்கிறது.

ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் நிதின் கட்காரியின் பேச்சு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஜனநாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்தைத் தவிர, மக்கள் வாழ்வதற்கு நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் சமமாக முக்கியத்துவம் அளிக்கிறது. நமது லட்சியங்கள், மற்றும் நம்பிக்கைகள் ஜனநாயகத்தில் முக்கியம்.” என்று தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply