Rapidly Developing Tidel Parks In Tamil Nadu : பல மாவட்டங்களில் வேகமான வளர்ச்சி பெற்றுள்ள டைடல் பார்க்குகள்

காரைக்குடி நியோ டைடல் - வேகமான வளர்ச்சி :

தற்போது தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல  மாவட்டங்களில் டைடல் பார்க்குகள், மற்றும் நியோ டைடல் பார்க்குகள் ஆனது அமைக்கப்பட்டு (Rapidly Developing Tidel Parks In Tamil Nadu) வருகின்றன. அந்த வகையில் காரைக்குடியில் அமைக்கப்பட உள்ள நியோ டைடல் பார்க் திட்டத்திற்கு உடனடியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் 50,000 சதுர அடியில் Rs.28.35 கோடியில் டைடெல் நியோ ஐடி பார்க் கட்ட டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

காரைக்குடியில் தற்போது செயல்பட்டு வருகின்ற 25க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்களின் மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதைத் தவிர காரைக்குடி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பத்தாயத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் சென்னை பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ள IT கம்பெனிகளில் வேலைகளில் உள்ளனர்.   இதனால் இந்த இளைஞர்கள் காரைக்குடியில் டைடல் பார்க் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த டைடல் பார்க் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதி பட்டதாரி இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நியோ டைடல் பார்க் திட்டத்திற்கு உடனடியாக டெண்டர் கோரி விடப்பட்டுள்ள அறிக்கை ஆனது காரைக்குடி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதி பட்டதாரி இளைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இந்த டைடல் நியோ பூங்காவின் புகைப்படங்கள் வெளியாகி மக்களை கவர்ந்து உள்ளன.

Rapidly Developing Tidel Parks In Tamil Nadu - தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வேகமான வளர்ச்சி பெற்று வருகின்ற டைடல் பார்க்குகள் :

தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், காரைக்குடி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, ஓசூர் மற்றும் தூத்துக்குடி என 10 நகரங்களில் IT பார்க்கிற்கான பணிகள் வேகமாக (Rapidly Developing Tidel Parks In Tamil Nadu) நடந்து வருகின்றன.

  • சேலத்தில் உள்ள ஓமலூர் தாலுகாவில் உள்ள ஆனைகவுண்டன்பட்டி/கருப்பூர் கிராமத்தில் டைடல் நியோ பூங்கா Rs.22.5 கோடி மதிப்பில் தரை+3 தளங்களுடன் கட்ட டெண்டர் கோரப்பட்டு டெண்டர் முடிந்து கட்டுமானம் தற்போது 80% முடிந்துள்ளது.

  • தஞ்சாவூரில் மேலவஸ்தச்சாவடி ஜங்சன் பகுதியில் Rs.92.50 கோடி செலவில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி கட்டுமான பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பார்க் என்ற சிறப்பு இடம் கட்ட திருச்சி மாநகராட்சி 14.1 ஏக்கர் நிலம் தருகிறது. இதற்கு ரூ.600 கோடி செலவாகும். விரைவில் இங்கே கட்டுமான பணிகள் ஆனது தொடங்கப்பட உள்ளன.

  • சமீபத்தில் தூத்துக்குடி டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார். சமீபத்தில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் 5 மாடி கட்டிடமாக இரண்டு பெரிய கட்டிடங்களாக  கட்டப்பட்டுள்ள IT பூங்கா திறக்கப்பட்டது. நவீன தோற்றத்தில் உள்ள இந்த ஐடி பார்க்கை IT நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான செயல்முறை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

  • தமிழ்நாடு அரசு ஆனது தாமதமின்றி தகவல் தொழில்நுட்பத் துறையானது செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த டைடல் பார்க்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் தமிழகத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்

Latest Slideshows

Leave a Reply