Rara Sarasuku Rara Censor Report : ரா..ரா..சரசுக்கு ராரா படத்திற்கு சென்சார் எதிர்ப்பு

Rara Sarasuku Rara Censor Report :

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் ரா..ரா..சரசுக்கு ராரா. இந்த படத்தை ஸ்கை வாண்டர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இப்படத்திற்கு ஜி.கே.வி அமைத்துள்ளார். 9 வி ஸ்டுடியோஸ் நவம்பர் 3 ஆம் தேதி படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் ஜெயலட்சுமி மற்றும் படத்தின் இயக்குனர் கேசவ் தபுர் பேசியதாவது.

“தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே.ராஜன் இங்கே இருக்கிறார். அவரது துணிச்சல் மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக, நம்மை மறந்து ஜாலியாக இருக்க இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். கத்தி, ரத்தம், வெட்டுக்குத்து என்று வரும் படங்களைத்தான் பார்த்து கொண்டிருக்கிறோம். அவற்றிலிருந்து வித்தியாசமாகவும் ஜாலியாகவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும். படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம் படப்பிடிப்பு வேலூரில் நடந்தபோது, தினமும் போலீஸ் கெடுபிடிகள். சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள், கமிஷனர்கள் வரை எங்களை துன்புறுத்தினார்கள். அப்போதெல்லாம் காட்பாடி ராஜன் எங்களுக்கு பாதுகாப்பக இருந்தார். அதை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

Rara Sarasuku Rara Censor Report : இந்த படத்தின் இயக்குனர் கேசவ் தெபுர் கூறியதாவது, இந்த படத்திற்கு சென்சாரில் 60 கட் (Rara Sarasuku Rara Censor Report) கொடுத்துள்ளனர். இத்தனை படங்களில் அனுமதித்த காட்சிகளையெல்லாம் எங்களுக்கு அனுமதிக்க முடியாது என்றார்கள். ரிவைசிங் கமிட்டிக்குப் போனோம். அங்கு நடிகை கவுதமி தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்லப் போகிறீர்கள் என்றார். லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன, நடக்கக்கூடாது என்று சொல்கிறோம். 4 பக்கங்களைக் குறிப்பிட்டு சிலவற்றை நீக்கச் சொன்னார்கள். நான் விளக்கினேன். அப்போது கைகளை காட்டி அவமானப்படுத்தியதை கருத்தில் கொண்டு மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என்றனர். எங்களுக்கு என்ன சொல்வது (Rara Sarasuku Rara Censor Report) என்று தெரியவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சென்சார் விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது புரியும். இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது கடினமாக இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்கை எடுத்து உற்பத்தியாளர் ஐந்தாறு வருடங்கள் அலைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கே.ராஜன், மாரி வினோத், விஜய் பிரசாத், காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply