Rashmika Mandanna Deepfake Video : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ

Rashmika Mandanna Deepfake Video :

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ (Rashmika Mandanna Deepfake Video) ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகி பான் இந்திய நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் இளைய தலைமுறையினரின் அபிமான நடிகையான ராஷ்மிகா, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்தார். தற்போது தனுஷின் டி51 படத்தில் நடித்து வருகிறார். மேலும் புஷ்பா 2 படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய அளவில் கொண்டாடப்பட்ட ராஷ்மிகா மந்தனா, நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக ‘குட் பை’ படத்திலும், அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார்.

பிரபலங்கள் கண்டனம் :

முன்னணி நடிகையாக முன்னேறி வரும் ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி பொறுக்காமல் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் வீடியோ (Rashmika Mandanna Deepfake Video) ஒன்று வெளியாகி உள்ளது. மற்றொரு நடிகையின் வீடியோவில் ‘டீப்ஃபேக்’  மூலம் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி சமூக ஊடகங்களில் விடியோவை (Rashmika Mandanna Deepfake Video) வெளியிட்டுள்ளனர். ரஷ்மிகாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் பச்சன் கண்டனம் :

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் ஒர்ஜினல் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, சாரா படேல் என்ற மற்றொரு நடிகை வெளியிட்ட வீடியோவில் ராஷ்மிகாவின் முகம் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Rashmika Mandanna Deepfake Video : “டீப்ஃபேக் டெக்னாலஜியை பயன்படுத்தி தகாத வீடியோக்களை உருவாக்குவது மிகவும் வேதனை அளிக்கிறது. அதுமட்டுமின்றி தனிமனித உரிமையை மீறும் ஒரு செயலாகும். இது போன்ற செயல்கள் மீது நிச்சயம் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த வீடியோக்களை தயாரித்தவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிட்டல் ஆள்மாற்றம் மற்றும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் அடங்கும். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அதிகாரிகள் அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமிதாப் பச்சன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக வீடியோவுக்கு வலைதள பயனர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply