Ratan Tata Passed Away : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். 86 வயதாகிய ரத்தன் டாடா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி (Ratan Tata Passed Away) உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் வாழ்க்கை பயணம் :
- டாடா குழுமத்தின் தலைவராக இருந்து, அதனுடைய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன்.
- 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி படித்தார். இதைத்தொடர்ந்து ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டு (Ratan Tata) டாடா குழுமத்தில் இணைந்தார்.
- கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த (Nelco) தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறுப்பு இயக்குனராக பதவி ஏற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது.
- ரத்தன் டாடா, 1991 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். டாடா நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்த பல புதிய திட்டங்களை உருவாக்கினார். இதன் மூலம் டாடா நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
- அதன் பிறகு லேண்ட் ரோவர், கோரஸ், ஜாகுவார் என பல வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது. டாடா குழுமம் பங்கு சந்தையில் அதிக முதலீடு கொண்ட நிறுவனமாக திகழ்ந்தது.
- இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
- ஏழை குடும்பத்தினர் ஒரே பைக்கில் நான்கு பேர் போவதை பார்த்து மனம் உடைந்து போனார். இதனால் குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க முடிவு செய்தார். இது ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் கனவு நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார்.
- இதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ‘டாடா நானோ’ கார் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகமாக ஆனது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார். ரத்தன் டாடா இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். Ratan Tata வெளிநாட்டு அறக்கட்டளைகளில் குழு உறுப்பினராகவும் இருந்தார். சிங்கப்பூர் அரசு இவருக்கு பத்ம விபூஷன், கார்னகி பதக்கம், பத்ம பூஷன் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது.
- உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்தார். டாடா குழுவின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, டாடா குழும அறக்கட்டளையின் தலைவராக இருந்து வழிநடத்தினார்.
Ratan Tata Passed Away :
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று (புதன்கிழமை) மும்பையில் இருக்ககூடிய தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர், வயது தொடர்பான பொதுவான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் (Ratan Tata Passed Away) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்