Raththam Movie Review : விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் திரைவிமர்சனம்

Raththam Movie Review : சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்செயன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

ரத்தம் படத்தின் கதை :

பிரபலமான ஊடகத்தில் வேலை செய்யும் செழியன் எனும் பத்திரிகையாளர் கொலை செய்யப்படுவதுடன் படம் துவங்குகிறது. தனக்கு மிகவும் பிடித்த நடிகர் பற்றி நெகட்டிவாக செய்தி வெளியிட்டதற்காக செழியனை கொன்றுவிடுகிறார் ரசிகர் ஒருவர். ஆனால் அந்த கொலையாளி தானாக செயல்பட்டாரா இல்லை யாரோ ஒருவரின் சுயலாபத்திற்காக பலிகடா ஆகிவிட்டாரா? இந்த கேள்வி தான், ரஞ்சித்குமார் (விஜய் ஆண்டனி) என்ட்ரி கொடுத்த பிறகு கேள்வி எழுகிறது. பிரபல புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித்குமார் (விஜய் ஆண்டனி) வாழ்வில் ஒரு பெரும் சோகம் நடக்கிறது. அதன் பிறகு தனது வேலையை விட்டுவிட்டு கொல்கத்தாவில் தங்கி தன் மகளை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறார்.

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் செழியன் ரஞ்சித்தின் நெருங்கிய நண்பர். தனக்கு தந்தை போன்றவரான இரத்தினம் பாண்டியனின் (நிழல்கள் ரவி) மகன். அதனால் தான் மீண்டும் வேலைக்கு திரும்பி வந்து செழியனின் கொலை குறித்து துப்பறிகிறார். அப்பொழுது தான் செழியனின் கொலைக்கு பின்னால் ஒரு சிலரும் / ஒரு பெரிய நெட்வொர்க்கும் இருப்பதை கண்டுபிடிக்கிறார் ரஞ்சித். மேலும் பல கொலைகள் நடக்கும் முன்பு அதற்கு எல்லாம் முக்கிய மூளையாக இருப்பவரை கண்டுபிடிப்பாரா ரஞ்சித்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அந்த கொலைகள் குறித்து கண்டுபிடிக்க ஹீரோ மிகவும் அறிவாளியாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால்தான் பாதி படத்தில் எல்லாம் ரஞ்சித்குமார் அவர் பத்திரிகையாளரா அல்லது போலீஸ்காரரா என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. மேலும் படத்தின் நிஜமான வில்லனை யாரும் குற்றவாளி என சொல்ல முடியாதபடி இருக்கிறார். கொலைகள் மூலம் கிடைக்கும் சந்தோஷத்திற்காக அதை அவர் செய்கிறார்.

Raththam Movie Review :

Raththam Movie Review : நல்ல கதையாக இருந்தாலும் அதை சுவாரஸ்யமாக இல்லாமல் எடுத்திருக்கிறார் சி.எஸ்.அமுதன். இந்தக் கொலைகளைச் செய்பவர்களின் நோக்கங்களை அவர் திறமையாக கடந்து செல்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக சுவாரசியமில்லாத காட்சிகள். எல்லா காட்சிகளும் நாம் ஏற்கனவே பார்த்த ஒரு வித்தியாசமான படத்தை பிரதிபலிக்கின்றன. ஒரு நடிகராக விஜய் ஆண்டனியின் வழக்கமான மௌன ட்ரீட்மென்ட் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி, ரம்யா நம்பீசன் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தாலும், வெளிச்சத்தில் ஜொலிக்க அவர்களுக்கு சிறப்பு வேடங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பல சமயங்களில் மொத்தாமாக கலர் மீன்களை  வாங்கி ஒரு சிறிய தொட்டியில் வைப்பது போல் ஒரே இடத்தில் நகர்கிறது. பாடல்கள் குறைவாக இருந்தாலும் படத்தில் பின்னணி இசை கவனத்தை ஈர்க்கவில்லை. ஆக மொத்தத்தில் தெரிப்பதை குறிக்கும் வகையில் “ரத்தம்” என்று தலைப்பு வைத்தாலும், உள்ளே அதற்கான தடயமே இல்லை என்பதே உண்மை. ஆக மொத்தத்தில் இந்த படத்தை ஒரு முறை (Raththam Movie Review) பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply