Raththam Movie Trailer : ரத்தம் படத்தின் டிரைலர் வெளியீடு

தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை எடுத்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் ஆவார். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘ரத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்திருக்கும், இப்படத்தின் டிரைலர் (Raththam Movie Trailer) தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தனக்கே உரிய பாணியில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இசையமைப்பாளர், நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகக் கலைஞராகத் திகழும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்த 2023-ம் ஆண்டு மட்டும் இதுவரை விஜய் ஆண்டனியின் படங்கள் தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், தமிழ் படம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் அவர்களின் இயக்கத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் தான் ரத்தம். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசைமைக்கிறார். ரத்தம் படத்திற்கு கலை இயக்குநராக செந்தில் ராகவனும், ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும் பணியாற்றுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ரத்தம் படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரத்தம் படத்தின் பரபரப்பான டிரைலர் (Raththam Movie Trailer) வெளியாகியுள்ளது.

Raththam Movie Trailer :

தனது தனித்துவமான பாணியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் அமுதன், தற்போது தீவிர அரசியல் சதியில் இறங்கியுள்ளார். தலைப்பிற்கு ஏற்றாற்போல், டிரைலர் கொலையுடன் தொடங்குகிறது. தனது வழக்கமான சீரியஸ் எக்ஸ்பிரஷனுடன், முழு தாடியுடன், தாடி இல்லாமல் இரண்டு தோற்றங்களில் விஜய் ஆண்டனி காணப்படுகிறார். தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் (Raththam Movie Trailer) புதியதாக ஈர்க்கும் படி இல்லை என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் விஜய் ஆண்டனியின் முகத்திற்கு தாடி சரியாக அமைக்கப்படவில்லை என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். படத்தின் டிரைலரில் ரத்தம் என்ற பாடல் மட்டும் நன்றாக இருப்பதாகவும், விரைவில் ரிலீஸ் தேதியை சொல்லுங்க பாஸ் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply