Ratnakumar Post About Leo Collection : லியோ வசூல் குறித்து ரத்னகுமார் போட்ட அதிரடி பதிவு

Ratnakumar Post About Leo Collection :

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வசூல் குறித்த விமர்சனங்களுக்கு அப்படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் ரத்னகுமார் பதில் (Ratnakumar Post About Leo Collection) அளித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ திரைப்படம், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், அனுராக் காஷ்யப், இயக்குனர் ராமகிருஷ்ணன், அர்ஜுன், பிக் பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியானதால், தொடர் விடுமுறையால் படத்தின் வசூலும் எகிறியது.

விஜய்க்கு ஏற்கனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் ரசிகர்கள் உள்ளனர். இதனால் திரைப்படம் வெளியிட்ட இடமெல்லாம் திருவிழா என்பது போல அனைத்து இடங்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக  ஓடியது. இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் ஒரு வாரமாகியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வசூல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சினிமா வட்டாரத்தில் வெளியான தகவலின்படி, ‘லியோ படம் ரூ.450 கோடி வசூல் செய்ததாக’ கூறப்பட்டது. அஜீத், ரஜினி என சொல்லிக்கொள்ளும் சிலரால் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

மேலும் நேற்று (அக்டோபர் 25) விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்கியுள்ளதால் பெரும்பாலும்  ரசிகர்கள் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிக ஸ்கிரீன்கள் உள்ள திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஜெயிலரின் வசூல் குறித்து ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லியோவின் வசூலை வெளியிடாதது குறித்து தனது X தளத்தில் திரைப்பட விமர்சகர் ஒருவர் ‘லியோ’ படம் ரூ. 400 கோடி வரை வசூலித்ததாக பதிவிட்டிருந்தார்.

Ratnakumar Post About Leo Collection : முன்பு ‘லியோ’ படம் ஜெயிலர் வசூலை மிஞ்சாது என்று பேட்டிகளில் பேசி வந்தார். இந்நிலையில், ‘லியோ’ வசூல் குறித்த பேச்சை மாற்றி பேசியுள்ளதை, ஒண்ணுமே புரியலையேய்யா குழப்பமா இருக்கு’ என வடிவேலுவின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அப்படி ஒரு வைரலான மீம்ஸை மேற்கோள் காட்டியுள்ளார் ‘லியோ’ படத்தின் இணை வசனகர்த்தாவும் லோகேஷ் கனகராஜின் நண்பருமான ரத்னகுமார். பீஸ்ட் படத்தில் விஜய் பேசும் ‘எங்கேயோ குழந்தை அழுற சத்தம் கேட்குதே என்று விஜய் பேசும் புகைப்படத்தை ஷேர் செய்து அவரை ட்ரோல் (Ratnakumar Post About Leo Collection) செய்துள்ளார். அவரது இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். ரத்னகுமாரை சிங்கம் களம் இறங்கிவிட்டது (Ratnakumar Post About Leo Collection) என பாராட்டி வருகின்றனர். 

Latest Slideshows

Leave a Reply