Ravi Bishnoi : ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பிஷ்னாய் முதலிடம்

மும்பை :

ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் Ravi Bishnoi முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் Ravi Bishnoi தொடர் நாயகன் விருதை வென்றார். இந்திய அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் Ravi Bishnoi விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக இந்த தொடரில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட பவர் ப்ளே பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியபோது, ​​அட்டாக்கில் இறங்கி பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் Ravi Bishnoi. ஒவ்வொரு போட்டியின் முதல் ஓவரிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார் Ravi Bishnoi.

Ravi Bishnoi :

லெக் ஸ்பின்னர் என்றாலும் Ravi Bishnoi அதிகம் ஸ்பின்னிங் செய்யாமல் அதிக கூக்லி பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். சாஹலைப் போலல்லாமல், பந்தை நன்றாக வீசவும், கொஞ்சம் கூடுதல் வேகத்தில் பந்து வீசவும் முடியும் என்பதால், பேட்ஸ்மேன்கள் ரவி பிஷ்னோயின் கூக்ளிகளை கணிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் Ravi Bishnoi 699 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஹஸரங்கா 3வது இடத்திலும், அடில் ரஷித் 4வது இடத்திலும், இலங்கை அணியின் திக்சனா 5வது இடத்திலும் உள்ளனர்.

இவர்கள் 5 பேரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது மேலும் ஆச்சரியம். அதேபோல், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளனர். அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ள நிலையில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் Ravi Bishnoi முதலிடம் பிடித்துள்ளார். பும்ராவுக்குப் பிறகு, அதிக தரவரிசையில் இருக்கும் டி20 வீரர் என்ற சாதனையையும் Ravi Bishnoi பெற்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply