Ravichandran Ashwin: பேட்ஸ்மேனாகவே இருந்திருக்கலாம்… பவுலராகி இருக்க கூடாது…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பிளேயிங் 11ல் சேர்க்க படாதது குறித்து ரவி அஸ்வின் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்ததற்கு, பிளேயிங் 11ல் ரவி அஸ்வினை சேர்க்காததே முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அஸ்வினை இந்திய அணியில் சேர்க்காத முடிவை கடுமையாக திட்டினார். ஆனால் அஸ்வின் அதனை குறித்து கவலைப்படாமல் அடுத்த 2 நாட்களில் இரண்டு வந்து டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தனியார் நாள் இதழுக்கு ரவி அஸ்வின் கொடுத்த பேட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியில் சேர்க்கபடாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், இந்திய அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்துள்ளேன். அதனால் அந்தப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தி இருந்தேன்.
இப்போது மட்டும் அல்லாமல், 2018 -2019 ஆண்டுகளில் கூட வெளிநாடுகளில் சிறப்பாக பந்துவீசி இருக்கிறேன். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஆடிய டெஸ்ட் தொடரில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் என்ற ஐடியா உடன் இந்திய அணி களம் இறங்கியது. அதனால் அதே திட்டத்துடன் இந்த இறுதிப்போட்டியையும் அணுகி இருக்கலாம். இங்கிலாந்தில் 4 வது இன்னிங்ஸில் தான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்கும். போதுமான ரன்களோடு 4 வது இன்னிங்ஸை எதிர் கொண்டால், ஸ்பின்னர்கள் நிச்சயம் வென்று கொடுப்பார்கள். அது முழுவதும் நமது மனநிலையை பொறுத்தது.
WTC Final இல் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள்! சிறு வயதில் சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ரன்கள் குவித்த போதும், பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லையே என்று நினைத்தே, நான் சிறந்த பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் நாளை நான் பயிற்சிக்காக எனது காலணியை போடும்போது, எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து விட்டு கண்டிப்பாக பந்துவீச்சாளராக மாறி இருக்க கூடாது என்று வருத்தம் ஏற்பட்டுள்ளது.
எந்த பேட்ஸ்மேனையும் ஆடுகளத்திற்கு பெஞ்ச் செய்ய மாட்டார்கள். ஆனால் பவுலர்களுக்கு மட்டும், குறிப்பாக பிங்கர் ஸ்பின்னர்களுக்கு மட்டும் நடந்து கொண்டே இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்குவதற்கு 2 நாளுக்கு முன், நான் இந்தியா அணியில் இல்லை என்று தெரியும். அதனால் வெளியில் இருந்து இந்திய வீரர்களுக்கு எப்படி உதவலாம் என்பதே எனது எண்ணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.