Ravindra Jadeja Tweet: தோனிக்காக மட்டுமே நாங்கள் இதை செய்தோம்!

 ஐபிஎல் தொடரின் இறுதிப் குஜராத் அணியை 5 விக்கெட் வித்யாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை சென்னை அணியின் மிகச் சிறந்தவர்களுள் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று மகிழ்ச்சியோடு ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டி

16 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரா மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியானது, மே 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழையின் காரணமாக விளையாட்டு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு போட்டியானது 27 ஆம் தேதி இரவு தொடங்கி 28 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் நிறைவு பெற்றது. இதில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலில் களமிறங்கி சென்னை அணியின் பந்து வீச்சை பதம் பார்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 214 ரன்களை எடுத்து.

இதனைத்தொடர்ந்து 215 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது அடுத்து மழை வந்ததால், விளையாட்டானது அடுத்தநாள் நாள் மாற்றப்பட்டு15 ஓவர்களுக்கு 171 என்ற இலக்கை மாற்றி அமைத்தனர். நிதானமாக விளையாடிய சென்னை அணிக்கு கடைசி பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒட்டு மொத்த மைதானமும் மழை பொழிந்து விட்டது போல் மயான அமைதியில் இருந்தது. உச்சகட்ட பரபரப்பு சூழ்ந்த நிலையில் கடைசி பந்தை ரவீந்திர ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஜடேஜாவின் நெகிழ்ச்சி

வெற்றியில் தோனி ஜடேஜாவை தனது தோல் மேல் தூக்கி நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து பேசிய ஜடேஜா எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றியை CSK குடும்பத்தின் முக்கிய நபரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று ஜடேஜா கூறியுள்ளார். இதை தொடர்ந்து IPL கோப்பை மற்றும் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனிக்காக மட்டுமே நாங்கள் இதை செய்தோம் என்றும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply