Raw Peanuts Benefits in Tamil: பச்சை வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வேர்க்கடலை பலருக்கும் பிடித்த ஒரு தின்பண்டம் என்று சொல்லலாம். இவை பெரும்பாலும் வறுத்த மற்றும் மசாலா சேர்க்கப்பட்டதாக இருக்கிறது. ஆனால் பச்சை வேர்க்கடலையில் தான் அதிகமான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மிகக் குறைந்த விலையில் பாதாம் பருப்பில் இருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் பாதாம் பருப்பில் இருந்து பெறலாம். அந்தவகையில் பச்சை வேர்க்கடலையை சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

பச்சை வேர்க்கடலையின் நன்மைகள் (Raw Peanuts Benefits in Tamil)

Raw Peanuts Benefits in Tamil: இதய ஆரோக்கியம்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்கள் ஆன புரதம், காப்பர், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் என அனைத்துமே பச்சை வேர்க்கடலையில் மிக அதிகமாகவே கிடைக்கின்றன. மேலும் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் பச்சை வேர்க்கடலையில் இருப்பதால் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்து, இதயத்தை பலப்படுத்துகிறது. 

Raw Peanuts Benefits in Tamil: ஞாபக சக்தி அதிகரிக்க

போலேட், வைட்டமின் பி 1, ஓலிக் அமிலங்கள் மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் பச்சை வேர்க்கடலையில் அதிகமாக இருக்கின்றன. இதனால் இவற்றை உட்கொள்வதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படும். மூளை வளர்ச்சியைத் தூண்டி நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் ஸ்கூல் போகும் போது ஸ்நாக்ஸ் கொடுத்துவிடுவதை விட பச்சை வேர்க்கடலையை பாதி வேகவைத்தோ அல்லது முளைகட்டியோ கொடுக்கலாம். இது அவர்களை சுறுசுறுப்பாகவும் மற்றும் ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. 

Raw Peanuts Benefits in Tamil: எலும்புகள் வலுவாக

தற்போது பலருக்கும் எலும்பு தேய்மானப் பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. பெண்களுக்கு பொதுவாகவே குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மான பிரச்சனை உண்டாகும். இதற்கு கால்சியம் பற்றாக்குறையே காரணமாகும். பாலில் இருந்து மட்டுமே கால்சியத்தை பெற முடியாது. கால்சியம் நிறைந்த உணவை தினசரி எடுத்துகொள்ள வேண்டும். அதற்குபச்சை வேர்க்கடலை சரியானதாக இருக்கும். இதில் பாஸ்பரஸ், மாங்கனீசு அதிக அளவில் நிறைந்திருப்பதால் இது எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும்.

Raw Peanuts Benefits in Tamil: உடல் எடையைக் குறைக்க

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முதலில் வேர்க்கடலை, முந்திரி ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் தவிர்க்கின்றனர். ஆனால் கொலஸ்ட்ராலின் தான் அதிக நன்மை இருக்கிறது. இவற்றில் இருக்கும் கொழுப்பும் புரதமும் சேர்ந்து உடலுக்கு ஆற்றலை தருகிறது. உணவின் அளவையும், கலோரி அளவையும் குறைக்க விரும்புபவர்கள் ஊறவைத்த பச்சை வேர்க்கடலையை சாப்பிடலாம். இது பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் இருக்கும் கேட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Raw Peanuts Benefits in Tamil: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க

வேர்க்கடலையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என வேர்க்கடலையைத் தவிர்க்கின்றனர். ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் பச்சை வேர்க்கடலையில் இருப்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட பச்சை வேர்க்கடலை சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply