RBI Grade B 2024 Notification Out : 94 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியில் (RBI) கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (RBI Grade B 2024 Notification Out) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 94 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.08.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Grade B 2024 Notification Out :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய ரிசர்வ் வங்கியில் Officers in Grade ‘B’ (DR) பதவிக்கு 66 காலிப்பணியிடங்களும், Officers in Grade ‘B’ (DR) – DEPR பதவிக்கு 21 காலிப்பணியிடங்களும், Officers in Grade ‘B’ (DR) – DSIM பதவிக்கு 7 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 94 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

  2. வயதுத் தகுதி (Age) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு 01.07.2024 அன்று வரை 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (UG) முடித்திருக்க வேண்டும்.

  4. சம்பளம் (Salary) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.1,22,717/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். மேலும் எழுத்துத் தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2024 ஆகும்.

  8. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர், OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகும். மேலும் SC/ST, PWD பிரிவினர்களுக்கு ரூ.100 ஆகும்.

  9. மேலும் விவரங்கள் அறிய :
    https://opportunities.rbi.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply