RBI New Rule : வங்கிகளில் செயல்படாத கணக்குகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள்

வங்கிகளில் செயல்படாத கணக்குகளை நிர்வகிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை RBI-யின் New Rule அறிமுகப்படுத்துகிறது. பொதுவாக வங்கிகளில் உள்ள மொத்த டெபாசிட்டை விட, செயல்படாத கணக்குகள் அல்லது உரிமைக் கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை ஆனது அதிகமாக உள்ளது. எனவே வங்கிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை  மேற்கொண்டு செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மேலும் அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்ற வங்கிகள் எல்லாம் எளிய நடைமுறையை (RBI New Rule) உடனடியாக பின்பற்ற வேண்டும்.

RBI New Rule

RBI-யின் மேற்பார்வையில் செயல்படாத வங்கி கணக்குகள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தப்பட்டது.  அந்த ஆய்வில்,

  • வங்கி கணக்குகள் செயலற்று போவதற்கான காரணங்கள்
  • உரிமை கோரப்படாத டெபாசிட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்கள்
  • நீண்ட காலமாக பரிவர்த்தனை நடைபெறாமல் இருப்பதற்கான காரணங்கள்
  • குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல்களை புதுப்பிக்காதது உட்பட பல்வேறு காரணங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன.
  • குறிப்பிட்ட காலத்திற்குள் KYC தகவல்களை புதுப்பிக்காதவர்களுக்கு வங்கிகள் KYC-யை தடையற்ற முறையில் புதுப்பிக்க மொபைல் அல்லது இணைய வங்கி, பிற வங்கிகளின் கிளை மற்றும் வீடியோ மூலமாக வாடிக்கையாளரை அடையாளம் கண்டு (RBI New Rule) செயல்படுத்த வேண்டும்.
  • அரசுகளால் வழங்கப்படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளின் தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக் காரணம் காட்டப்பட்டு முடக்கப்படுவதை  தவிர்க்க வேண்டும்.
  • 10 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக செயல்படாமல் இருந்து வங்கிகளில் பராமரிக்கப்படும் எந்தவொரு டெபாசிட் கணக்கிலும் உள்ள கிரெடிட் இருப்புகள் ஆனது RBI வங்கியால் பராமரிக்கப்படும் DEA (டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு) நிதிக்கு மற்ற வங்கிகளால் மாற்றப்பட வேண்டும்
  • வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை தொடர்ந்து வரவுகளாக (RBI New Rule) வைக்கப்பட வேண்டும்.
  • வங்கிகளின் மேலாளருக்கு செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை காலாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
  • செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்படுத்த சிறப்பு முகாம்கள் (RBI New Rule) ஆனது நடத்தப்பட வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply