RC 15 Title Game Changer: ராம் சரணுக்காக நடனம் அமைத்த பிரபுதேவா
‘RC 15’ படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக முடிந்ததை ராம் சரண் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படம் ‘RC 15’ திரைப்படம் ஆகும். இது மிகவும் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி முதன்மை கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் பாடல் ஒன்று நியூஸ்லாந்தின் அழகிய பகுதியில் பாடல் படமாக்கப்பட்டது. அதையடுத்து, அடுத்த பாடலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பிரபல நடன இயக்குனர் பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த பாடல் நிறைவடைந்ததை ராம் சரண், ஷங்கர் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Ram Charan 15 Title - Game Changer
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கும், பெயரிடப்படாத தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.படத்தின் நாயகனாக ராம் சரண் நடித்து வருகிறார். பட எண்ணிக்கையை குறிப்பிடும் வகையில் ‘RC 15’ என அழைக்கப்பட்ட படத்தின் பெயர் இன்று (மார்ச் 27) ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. முதலில் படத்திற்கு ‘சிஇஓ’ என்று பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அவை அனைத்தையும் பொய்யாக்கி புதிய பெயரை அறிவித்துள்ளது. அதாவது “கேம் சேஞ்சர்” என படத்திற்கு பெயர் வைத்து அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
மோஷன் போஸ்டர் காட்சிகள் அனைத்தும் அரசியல் சார்ந்த காட்சிகளாக உள்ளன. எனவே இந்தப் படம் அரசியலைப் பேசப் போவதாகத் தெரிகிறது. கியாரா அத்வானி கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்திற்கு பிறகு ராம் சரண் நடித்து வெளிவரும் படம் என்பதால் இப்படம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.