RCB Former Coach Mike Hesson : மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்றும் நீக்கமா?

RCB Former Coach Mike Hesson :

ஐபிஎல் தொடரில் ஒரு முக்கிய அணியாக கருதப்படும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அந்த அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இருந்தாலும் அந்த அணியின் புகழ் சற்றும் குறையாது. ஏனெனில் அந்த அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விராட் கோலி ஒருவருக்காகவே அந்த அணிக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் பல கோடி பேர்கள். ஆனால் எப்போதும் வலுவான அணிகளில் ஒன்றாகவே கருதப்படும். அப்போதும் கூட அந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நேரங்களில் செய்யும் சிறிய சிறிய தவறுகளின் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லாமல் வெளியேறுகிறது. அந்த அணிக்கு பவுலிங் எப்போதும் ஒரு குறை தான். அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்து காணப்பட்ட போதும் கடைசியில் பந்துவீச்சு சொதப்புவதால் அவர்கள் கோட்டை விடுகின்றனர். டூ ப்ளஸிஸ், கெயில் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடிய போதும் அந்த அணி ஒரு முறை கூட ஜெயிக்கவில்லை என்பது சோகமான விஷயம் ஆகும்.

இதனை நிறைவு செய்யும் வகையில் அந்த அணிக்கு பல்வேறு வகையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பல வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சில சமயம் பயிற்சியாளர்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக இருந்தவர் மைக் ஹசன். இவர் தலைமையில் பெங்களூர் அணி மற்ற வருடங்களை விடவும் சிறப்பாக செயல்பட்டது. ஏறக்குறைய மூன்று முறை பெங்களூரு அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இருந்த போதும் பெங்களூர் அணி உரிமையாளர்கள் இவரை பதவி நீக்கம் செய்துள்ளனர்.

மைக் ஹசன் வருத்தம் :

அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணி முன்னாள் வீரர் ஆன்ட்டி ஃபிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்காக பயிற்சியாளராக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்தக் காரணத்தினால் அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு இவர் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பதவியின் நீக்கம் குறித்து பேசிய இவர், பெங்களூர் அணியை விட்டு வெளியேறுவது மிகுந்த ஏமாற்றம் தருகிறது. நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக விளையாடி வந்தோம். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பின் படி கோப்பையை வெல்ல முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரு அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்று இருக்கிறேன். இருந்தும் நான் ஏன் நீக்கப்பட்டுள்ளேன் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் பெங்களூர் அணியின் அனைத்து வீரர்களுக்கும் புதிய பயிற்சியாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

Latest Slideshows

Leave a Reply