Real Estate Project Grow Up To 25 Percent : 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தாலும் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மெட்ரோ விரிவாக்கம், மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களினால் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி புதிய (Real Estate Project Grow Up To 25 Percent) பாதையை நோக்கி பயணிக்கிறது. ப்ரோப் ஈக்விட்டி நிறுவனத்தின் அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் அதிகப்படியான விற்பனையுடன் இந்தியாவின் முக்கிய ரியல் எஸ்டேட் சந்தையாக டெல்லி மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் காலாண்டில் மட்டும் டெல்லியில் வீடு விற்பனை 25 சதவீதம் வரையிலும், புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் விற்பனையானது 59 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆதிக்கம் செலுத்தும் டயர் 1 நகரங்கள்

பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற டயர் 1 நகரங்கள் ரியல் எஸ்டேட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மேலும் 2024 ஆம் ஆண்டில் டயர் 2 நகரங்களிலும் இதே வளர்ச்சி (Real Estate Project Grow Up To 25 Percent) தென்பட்டது. டயர் 1 நகரங்களில் வீடு வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இந்நகரங்களில் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரம், விசாலமான இடம், நவீன வசதிகள் போன்றவை காரணமாகும்.

ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் ஆடம்பர (Luxury House) வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் செம்டம்பர் மாதம் வரையிலான காலாண்டுகளில் ஆடம்பர வீடுகளின் விற்பனையானது வழக்கத்தை விட 37.8 சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வசதி படைத்த (Real Estate Project Grow Up To 25 Percent) இந்தியர்களின் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், 60 சதவீத வீடு வாங்குபவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதாகவும் ப்ரோப் ஈக்விட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கண்ணோட்டம் (Real Estate Project Grow Up To 25 Percent)

Real Estate Project Grow Up To 25 Percent - Platform Tamil

இந்த 2025 ஆம் ஆண்டிலும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சி நம்பிக்கைகுரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை 10 சதவீத வருடாந்திர வளர்ச்சி என்ற விகிதத்தில் உயரும் என்றும், இதுமட்டுமல்லாமல் 2030 ஆம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் சந்தை 1 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும் 2025 ஆம் ஆண்டிலும் ரியல் எஸ்டேட் துறை சுமார் 25 சதவீதம் வரை (Real Estate Project Grow Up To 25 Percent) வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது சிறந்த வடிவமைப்புகளுக்கு கட்டிடக் கலைஞர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர். இதுனுடன் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், ஆட்டோமேட்டிக் செட்டப், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் ரியல் எஸ்டேட் துறையில் ஈர்க்கப்படுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply