Realme GT5 Pro-வின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று Realme GT5 Pro சீனாவில் நவம்பர் மாதத்திலேயே வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் Realme நிறுவனம் தனது GT தொடரின் புதிய ஃப்ளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது. Realme GT5 Pro வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மொபைல் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சீனாவில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு இந்தியாவில் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்படுகிறது. Realme GT5 Pro வெளியீடு அனைத்து சமூக ஊடக தளங்களிலும் நேரடியாகக் காண்பிக்கப்படும். இந்த போன் வரும்  ஜனவரி 2024 இல் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme GT5 Pro சிறப்பம்சங்கள் :

  1. Qualcomm Snapdragon 8 Gen 3 : Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்படும் Realme நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் Realme GT 5 Pro ஆகும். இந்த ஆக்டேகோர் சிப்செட் 4 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3.3GHz வரை கடிகார வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இது ஸ்னாப்டிராகன் X75 5G மோடம் சிப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமான இணையம் மற்றும் 5G சேவையை வழங்குகிறது.
  1. Realme GT5 Pro Display : Realme GT 5 Pro ஆனது 6.78-இன்ச் 1.5K அடிப்படையிலான OLED பேனலைப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் தொழில்துறையின் சிறந்த 144Hz இதில் வழங்கப்பட்டுள்ளது. Realme GT 5 Pro ஆனது Android 14 (OS) அடிப்படையிலான Realme UI 5 ஐ அடிப்படையாகக் கொண்டது.
  1. Realme GT5 Pro Camera : இந்த Realme GT5 Pro ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP முதன்மை கேமரா Omnivision OV 0810 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 32MP முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுயுள்ளது.
  1. Realme GT5 Pro Memory : இந்த Realme GT5 Pro ஸ்மார்ட்போனில் 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB UFS 4.0 சேமிப்பிடம் வழங்கப்பட்டுயுள்ளது என Realme நிறுவனம் அறிவித்துள்ளது.
  1. Realme GT5 Pro Battery : Realme GT5 Pro ஸ்மார்ட்போனில் பேட்டரியைப் பொறுத்தவரை 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,400mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply