Realme Narzo Series : ரியல்மி நிறுவனம் ஜூலை 29 ஆம் தேதி நார்சோ சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது

வரும் ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக (Realme Narzo Series) அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் வெளியிட்டுள்ளது.

Realme Narzo Series : ரியல்மி நார்சோ என்63 சிறப்பம்சங்கள்

  1. Realme Narzo N63 Display : இந்த ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன்  அறிமுகம் (Realme Narzo Series) செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகிறது. இந்த ரியல்மி நார்சோ என்61 மாடலானது நீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான IP54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இந்த ரியல்மி நார்சோ என்63 போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகிறது.

  2. Realme Narzo N63 Camera : இந்த ரியல்மி நார்சோ என்63 போனில் 64MB பிரைமரி கேமரா + 2MB டெப்த் சென்சார் + 2MB மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் தனியே 8MB கேமரா இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.

  3. Realme Narzo N63 Storage : 6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ என்63 போன் விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த நார்சோ என்63 போனில் உள்ளது.

  4. Realme Narzo N63 Rate : ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய ரியல்மி நார்சோ என்63 ஸ்மார்ட்போன் ரூ.10,000 என்கிற குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply