ரியல்மி நிறுவனம் Realme P2 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் Realme P2 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Realme P2 Pro 5G Specifications :

  1. Realme P2 Pro 5G Display : இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோல்ட் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ரியல்மி போனில் அட்ரினோ 710 ஜிபியு  கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  2. Realme P2 Pro 5G Camera : இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் OIS ஆதரவு கொண்ட 50MB சோனி கேமரா + 8MB அல்ட்ரா வைடு கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32MB சோனி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  3. Realme P2 Pro 5G Storage : இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 512GB மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ரியல்மி பி2 ப்ரோ போன் யுஐ 5.0 சார்ந்த இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  4. Realme P2 Pro 5G Battery : இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

  5. Realme P2 Pro 5G Rate : 8GB ரேம் + 128GB மெமரி கொண்ட ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.21,999/- ஆகவும், 12GB ரேம் + 256GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.24,999/- ஆகவும் மற்றும் 12GB ரேம் + 512GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.27,999/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவருக்கு ரூ.2000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply