Reason For Pakistan Loss : பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் கேப்டன் பாபர் அசாம்

Reason For Pakistan Loss : ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இம்முறை உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, பலவீனமான ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு (Reason For Pakistan Loss) பாபர் அசாம் தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ஆனால் பாபர் அசாமின் கேப்டன்சி ஏமாற்றமளிப்பதாக பலரும் விமர்சித்தனர். பாபர் ஆசாமின் சிறு தவறுகளே பாகிஸ்தானின் தோல்விக்கு (Reason For Pakistan Loss) காரணம் என்கிறார்கள்.

Reason For Pakistan Loss - வாசிம் அக்ரம் :

ஆனால் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு (Reason For Pakistan Loss) முக்கிய காரணம் பீல்டிங்கில் ஏற்பட்ட குறைபாடுகள். ஆனால் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாபர் அசாம் செய்த தவறை சுட்டிக்காட்டினார். அதில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 46-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் வீசியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், 45 ஓவர்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து ஓவர்கள் மீதமுள்ளன. இரண்டு ஓவர்களை ஷகின் அப்ரிடியும், இரண்டு ஓவர்களை ஹாரிஸ் ரவுப் மற்றும் ஒரு ஓவரை ஹசன் அலியும் வீசினால் 50 ஓவர்களை முடித்திருக்கலாம். மேட்ச் கடைசி பந்திற்கு கூட சென்றிருக்கும். ஆனால் 46-வது ஓவரில் உசாமா மிர் அவர்களை பந்து வீச பாபர் அசாம் அழைத்தார். இதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. பாபர் அசாம் ஏன் இப்படி தவறு (Reason For Pakistan Loss) செய்கிறார். மேலும், சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் பாபர் அசாம் எப்படி கேப்டனாக இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply