Red Ladies Finger Benefits: சிவப்பு வெண்டைக்காய் நன்மைகள்

பொதுவாக வெண்டைக்காய் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு காய்கறி. இதில் பச்சை வெண்டைக்காய், சிவப்பு வெண்டைக்காய் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஊட்டச்சத்தை தருகின்றன.

வெண்டைக்காய் பொதுவாக மனித உடலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும் காணப்படுகிறது. இயற்கையாக விளையும் காய்கறிகள் பொதுவாக மனித உடலுக்கு ஆரோக்கியமானவை. காய்கறிகளின் நிறங்களும் அவற்றின் நன்மையும் இணைந்து மனதிற்கு மென்மையான அதிர்வுகளையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. இருப்பினும், காய்கறிகளின் நிறங்கள் பல்வேறு வகைகளுக்கு மாறுபடும். தற்போதைய நவீன யுகத்தில் ஏராளமான மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இருப்பினும் சில காய்கறிகள் இயற்கையாகவே அவற்றின் வழக்கமான நிறங்களில் இருந்து வேறுபாட்டுடன் உள்ளன. அத்தகைய ஒரு காய் தான் லேடீஸ் பிங்கர் என்று அனைவராலும் அழைக்கப்படும் வெண்டைக்காய் ஆகும்.

நம் வீடுகளில் பிரதான உணவாகப் பயன்படுத்தப்படும் வெண்டைக்காய் பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால், தற்போது சிவப்பு நிற விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.காஷி லலிமா என்று இந்திய வேளாண் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிவப்பு வெண்டைக்காய் கண்ணை கவரும் விதமாக பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் போன்று பிரகாசமாய் இருக்கும். அப்படிப்பட்ட இந்த சிகப்பு வெண்டைக்காயில் 5 சதவீதம் புரதம், 21 சதவீதம் இரும்புசத்து இருப்பது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.

சிவப்பு வெண்டைக்காயின் சிறப்புகள்

பச்சை வெண்டைக்காயுடன் ஒப்பிடும்போது, ​​இந்த சிவப்பு வெண்டைக்காயில் சில சிறப்பு சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள இரும்பின் அளவு மிக அதிகம். இது தவிர இதில் வைட்டமின் பி 9, கால்சியம் ஆகியவை உள்ளது. இதை உருவாக்கிய நிபுணர்களின் கூற்றுப்படி இதில் சில சிறப்பு ஆக்ஸிஜனேற்ற கூறுகளை கொண்டுள்ளது. இதன் மூலம் கர்பமாக இருக்கும் பெண்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.

இதய ஆரோக்கிய நன்மைகள்

சிவப்பு வெண்டைக்காயில் உள்ள கால்சியம், இரும்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள், அதாவது சிவப்பு நிற வெண்டைக்காய் இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த சிவப்பு நிற வெண்டைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்க உதவுகிறது. இந்த சிவப்பு வெண்டைக்காயை ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலும் பயிரிடலாம்.

உலக அளவில் அதிகமானோர் இறப்பிற்கு இதய நோய்கள் முக்கியக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மாரடைப்பு, பக்கவாதம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் இதய நோயுடன் தொடர்புடையவை. ஆனால் இந்த சிவப்பு வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து இதய வால்வுகளில் கொழுப்பு படித்தல், அடைப்பு ஆகிவற்றை தடுக்கலாம்.

Red Ladies Finger Benefits List

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலம் ஆகும். வழக்கத்தை விட அதிக சத்தான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். இது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் இரும்பு மற்றும் போலிக் அமிலம் ஆகிய இரண்டும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமானவையாகும். கர்ப்ப காலத்தில் இந்த சிவப்பு நிற வெண்டைக்காயை அதிகமாக உட்கொள்வது இரும்புச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தாமல் தடுக்க உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவு

நாம் வழக்கமாக சாப்பிடும் பச்சை வெண்டைக்காய்க்கு கூட ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை இருக்கிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றாகும். அதேபோல சிவப்பு வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் இன்சுலின் சுரப்பு முறைப்படுத்தப்படும். ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த வெண்டைக்காய் மிகவும் உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை தீர்க்கிறது.

குடல் நச்சுகளை வெளியேற்ற

சிவப்பு வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கவும், புண்களை ஆற்றவும் உதவுகிறது. கூடுதலாக, சரியான செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வயிற்றுப் பிடிப்புகள், தசைப்பிடிப்பு மற்றும் குடல் பிரச்சனைகளை குணப்படுத்தவும் இந்த சிவப்பு வெண்டைக்காய் உதவுகிறது.

காய்கறிகள் எப்போதும் உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமின்றி, அவற்றின் நிறங்களும் நமக்கு இதமான அதிர்வுகளையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. காய்கறிகளை சத்து நிறைந்த கலவையாக பார்க்கிறோம். காய்கறிகளின் நிறங்கள் பல்வேறு வகைகளுக்கு மாறுபடும். அவ்வாறு மாறுபட்டிருக்கும் சிவப்பு வெண்டைக்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

Latest Slideshows

Leave a Reply