Red Sea Internet Service Cables Severed : பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கடலில் இணையச் சேவை கேபிள்கள் துண்டிக்கப்பட்டது

Red Sea Internet Service Cables Severed :

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று செங்கடலில் இணையச் சேவை கேபிள்கள் துண்டிக்கப்பட்டது (Red Sea Internet Service Cables Severed) என்று கூறப்படுகிறது. உலக நாடுகள் செங்கடலில் அடி விழுந்தால் கதறுகின்றன. அதற்கு முக்கிய காரணம் கடல்வழி வர்த்தகம் பாதிக்கப்படுவது ஆகும். இணையச் சேவை கேபிள்கள் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இரண்டு நாட்களாக இணையச் சேவையில் (Red Sea Internet Service Cables Severed) பெரிதும் பாதிப்பு ஆனது ஏற்பட்டது. தற்போது  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மாற்று வழிகள் மூலம் இணையச் சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹவுதி படைகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் ஹவுதி படைகள் இதை மறுத்துள்ளனர். மேலும் ஹவுதி படைகள் ஆனது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளால் தான் இத்தகைய கேபிள் துண்டிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்றும் ஹவுதி படைகள் பொறுப்பல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். ஹவுதி கிளர்ச்சி படைகள் செங்கடலில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக நாடுகளில் முக்கியமான கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது சம்பந்தப்பட்ட உலக நாடுகள் மாற்று வழிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மாற்று வழி ஏற்பாடுகள் :

இந்தியாவை சேர்ந்த பிரபல Tata Communications நிறுவனம் சீகாம் – டி.ஜி.என் – கல்ஃப் லைன் கேபிள் பரிமாற்றத்தில் இருக்கிறது. Tata Communications நிறுவனம் இது தொடர்பாக விளக்கமளித்த போது, “Tata Communications நிறுவனம் கேபிள்கள் மூலம் பல்வேறு வழித்தடங்களில் விரிவான இணையச் சேவையை வழங்கி வருகிறது. Tata Communications நிறுவனம் ஆனது எதிர்பாராத விதமாக கேபிள்கள் துண்டிக்கப்பட்டால் மற்றும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தால் மாற்று வழியில் இணையச் சேவையை வழங்க செயல்படும் என்றும் அந்த வகையில் தற்போது அவசர அவசரமாக மாற்று ஏற்பாடுகள் ஆனது செய்யப்பட்டு தடையற்ற சேவைகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளது.

செங்கடல் தாக்குதல் :

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 150 நாட்களை தொட்டு விட்டபோதும், ஹமாஸ் படைகளை ஒழிக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு காசா என்ற பகுதியையும், பாலஸ்தீனிய மக்களையும் தடம் தெரியாமல் அழிக்கும் முனைப்பில் இஸ்ரேல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சூழலில் ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைகள் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் வணிக கப்பல்களை ஹவுதி கிளர்ச்சி படைகள் குறிவைத்து அதிரடியாக தாக்கி வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதனால் கலக்கமடைந்துள்ளன. அதேசமயம் செங்கடலில் ஐரோப்பிய யூனியன் கடற்படை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு :

இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் ஏமனில் புகுந்து ஹவுதி படைகள் மீது வான்வெளி பதிலடி தாக்குதலையும் நடத்தி உள்ளன. இருந்தபோதும் ஹவுதி படைகளின் ஆட்டம் ஆனது ஒரு முடிவுக்கு வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு புதிய சர்ச்சை ஆனது வெடித்துள்ளது. பல்வேறு நாடுகளின் இன்டர்நெட் கேபிள்கள் செங்கடலுக்கு அடியில் செல்கின்றன. எதிர்பாராத விதமாக இவற்றில் மூன்று கேபிள்கள் (Red Sea Internet Service Cables Severed) ஆனது துண்டிக்கப்பட்டுவிட்டன. ஏமன் நாட்டின் கடல் எல்லைக்கு உட்பட்ட தெற்கு செங்கடலில் இந்த மூன்று கேபிள்கள் ஆனது இருக்கின்றன. ஹெச்.ஜி.சி குளோபல் கம்யூனிகேஷன் நிறுவனம் ஆனது பாதிக்கப்பட்ட லிஸ்டில் இந்தியா கேட்வே, சீகாம் – டி.ஜி.என் – கல்ஃப், ஆசியா – ஆப்பிரிக்கா – ஐரோப்பா 1 மற்றும் ஐரோப்பா ஆகிய கேபிள்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் செங்கடல் வழியாக நடைபெறும் இணையத் தொடர்பில் 25% பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இணைய சேவையை மாற்று வழியில் அளிக்க திட்டமிட்டு வேலைகள் நடந்து வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply