Redmi 13C 5G ரூ.9,999/- குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது

இந்தியாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) போனானது அமேசான் தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி 13சி 5ஜி சிறப்பம்சங்கள் (Redmi 13C 5G Specifications) :

  1. Redmi 13C 5G Display : இந்த ரெட்மி போன் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதனுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டும்  வழங்கப்பட்டுள்ளது.
  1. Redmi 13C 5G Storage : இந்த Redmi 13C 5G போனில் 4GB RAM + 128GB மெமரி மற்றும் 6GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (Micro SD) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் வருகிறது.
  1. Redmi 13C 5G Camera : இந்த ரெட்மி போனில் 50MB மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் டைம்-லேப்ஸ் மற்றும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 10MB செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஃபிலிம் கேமரா (Film Camera) ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode) மற்றும் எச்டிஆர் (HDR) பால்ம் ஷட்டர் (Palm Shutter) வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) மற்றும் சாப்ட்-லைட் ரிங் (Soft-Light Ring) போன்ற பீக்சர்கள் வருகின்றன. இந்த Redmi 13C 5G மாடல் 192 கிராம் எடை மற்றும் 8.09 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock) உடன் வருகிறது. அதோடு சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் எப்எம் ரேடியோ (FM Radio) சப்போர்ட் வருகிறது.
  1. Redmi 13C 5G Rate : இந்த போனின் 4GB RAM + 128GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 6GB RAM + 128GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499 ஆகவும் அதேபோல 8GB RAM + 256GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் அறிமுக சலுகையில் ரூ.1000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் (ICICI Bank Credit Card) பயன்படுத்தியும் டிஸ்கவுண்ட் பெறலாம். இந்த Redmi 13C 5G 4GB+128GB வேரியண்ட்டை வெறும் ரூ.9,999 க்கு வாங்கி கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply