ரெட்மி நிறுவனம் புதிய Redmi 14R 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் Redmi 14R 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Redmi 14R 5G Specifications :

  1. Redmi 14R 5G Display : இந்த ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 6.88-இன்ச் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 1640 x 720 கூகுள் பிக்சல்ஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  2. Redmi 14R 5G Camera : இந்த ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 40 MB சோனி கேமரா + 13 MB அல்ட்ரா வைடு கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் தனியே 10MB சோனி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  3. Redmi 14R 5G Storage : இந்த ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி போனில் உள்ளது.

  4. Redmi 14R 5G Battery : இந்த ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

  5. Redmi 14R 5G Rate : ரெட்மி 14ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவருக்கு ரூ.500 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply