ரெட்மி நிறுவனம் Redmi K70 Ultra ஸ்மார்ட்போனை வரும் 2024-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது

இந்த புதிய Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே70 அல்ட்ரா சிறப்பம்சங்கள் (Redmi K70 Ultra Specifications) :

  1. Redmi K70 Ultra Display : 2கே ரெசல்யூஷன் (2K Resolution) கொண்ட 8D  OLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒஎல்இடி டிஸ்பிளே என்பதால் தனித்துவமான திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. 9300 சிப்செட் மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity 9300 Chipset) வசதியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போனுக்கு மாலி-ஜி720 எம்பி12 ஜிபியுகிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

  2. Redmi K70 Ultra Storage : 12GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 512GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

  3. Redmi K70 Ultra Camera : 50MB சோனி (IMX LYTIA) 800 பிரைமரி கேமரா + ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 108MB அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதனுடன் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32MB கேமரா உடன் ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரெட்மி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

  4. Redmi K70 Ultra Battery : 5000mAh  பேட்டரியுடன் இந்த ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும்  இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்த 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்தியாவில் Redmi K70 Ultra  ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000/- பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply