Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது

இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகும் வேளையில் Redmi Note 13 Pro Plus போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications) :

  1. Redmi Note 13 Pro Plus Display : Redmi ப்ரோ பிளஸ் போனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. மேலும் இதுவொரு 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த ஓஎல்இடி டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட்யுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 3D கர்வ்ட் டிசைன் கொண்டிருப்பதால் புதுவித டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  2. Redmi Note 13 Pro Plus Battery : ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 120W ஹைப்பர் சார்ஜ் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 29 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். சோனி Imx 355 சென்சார் வருகிறது.

  3. Redmi Note 13 Pro Plus Camera : இந்த போனில் 200MB மெயின் கேமரா மற்றும் சாம்சங் எச்பி3 சென்சார் + 8MB அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா அதோடு ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சார் கொண்ட 2MB  மேக்ரோ கேமரா வருகிறது. இதனுடன் 16MB செல்பீ கேமரா சென்சாருடன் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது.

  4. Redmi Note 13 Pro Plus Storage : ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 8GB RAM + 256GB மெமரி, 12GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 512GB மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வர இருக்கின்றன.

  5. Redmi Note 13 Pro Plus Colors : ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் ப்யூசன் பிளாக் (Fusion Black) ப்யூசன் வைட் (Fusion White) மற்றும் ப்யூசன் பர்பிள் (Fusion Purple) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

  6. Redmi Note 13 Pro Plus Rate : இந்த போனின் 8GB RAM + 256GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999/- ஆகவும் 12GB RAM + 256GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999/- ஆகவும் 12GB RAM + 512GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply