Sunaina's Regina Teaser: சுனைனா நடிப்பில் ரெஜினா படத்தின் டீசர் வெளியீடு
சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் ரெஜினா படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக உருவாவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுனைனா. ஆனால் அவரது கேரியர் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ரெஜினாவின் டீசர் சுனைனாவின் கேரியரில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெஜினா படத்தின் டீசர் வெளியீடு
லத்தி படத்தை தொடர்ந்து சுனைனா நடித்திருக்கும் படம் ரெஜினா. இந்த படத்தை இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாளத்தில் பைப்பின் சுவத்திலே பிராணாயம், ஸ்டார் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சதீஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நிவாஸ் ஆதித்தன், ரிது மந்திரா, செல்லத்துரை, விவேக் பிரசன்னா, பவா செல்லத்துரை, அனந்த் நாக், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சதீஷ் நாராயணன் தயாரித்து, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடும் ரெஜினா படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Regina Teaser - எப்படி இருக்கு
தற்போது வெளியான டீசர் முழுவதுமே நிரம்பி இருக்கிறார் சுனைனா. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதையை கணிக்க முடியாதபடி கதைகள் உள்ளன. ரெஜினா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக படம் உருவாகியுள்ளது என தெரிகிறது. டீச்சரின் தொடக்கத்தில் வங்கி கொள்ளை காட்சி காட்டப்பட்டுள்ளது. விறுவிறுப்பான த்ரில்லர் கதையாக உள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை பார்த்திராத புதிய கேரக்டரை சுனைனா ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுனைனா ஸ்டைலாக புகைபிடிப்பது முதல் கொலை செய்வது வரை இந்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.