Regina Trailer: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரெஜினா ட்ரைலர்

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுனைனா. தெலுங்கில் திரைஉலகத்திற்கு அறிமுகமான இவர் காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதை பின்னணியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வம்சம் படத்தில் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தார். இதனையே தமிழ் படங்களில் தற்காலிகமாக நடிக்காத சுனைனா கடந்த ஆண்டு வெளியான ‘லத்தி’ படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

தற்போது, நடிகை சுனைனா தமிழில் கதாநாயகியாக மையப்படுத்தி உருவாகி இருக்கும் அதிரடி ஆக்‌ஷன் படமான ‘ரெஜினா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் டோமின் டி சில்வா இப்படத்தை இயக்கியுள்ளார். ‘YELLOW BEAR PRODUCTION LLP’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதிஷ் தயாரித்துள்ளார். சுனைனா முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நிவாஸ் ஆதித்யன், ஆனந்த் நாக், கஜராஜ், பாவா செல்லத்துரை, தீனா, விவேக் பிரசன்னா, பசுபதி ராஜ், அப்பானி சரத், ரஞ்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் சதிஷ் நாயர் இசைமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.

‘ரெஜினா’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் சுனைனாவுக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று வாழ்த்தி வருகின்றனர். ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply