Registration No BH : இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும்

Registration No BH - அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகக் கூடிய எண்ணாகும் :

இந்தியாவில் உள்ள வாகன உரிமையாளர்கள் இந்தப் பதிவு எண்ணைப் பெற்றுக் கொண்டால், அவர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் புதிய பதிவு எண்ணைப் பெறவோ அல்லது கூடுதல் சாலை வரி கட்டவோ தேவையில்லை. இந்தப் பதிவு எண்ணானது (Registration No BH) இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகக் கூடியது.

Indian Motor Vehicle Act :

இந்தியாவில் உள்ள இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி (Indian Motor Vehicle Act), ஒரு மாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு ஒரு வாகன உரிமையாளர் குடிபெயர்ந்தால் ஒரு வருடம் வரை பதிவு எண்ணை மாற்றாமல் அவரது வாகனத்தை அந்த மாநிலத்தில் இயக்கலாம். ஆனால், அதுவே ஒரு வருடத்திற்கு மேல் என்றால் கண்டிப்பாக  வாகன உரிமையாளர் அந்த மாநிலத்தில் சாலை வரி கட்ட வேண்டும் மற்றும் அந்த வாகன உரிமையாளர் மீண்டும் தமது வாகனத்தை அந்த மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

எனவே அடிக்கடி வெவ்வேறு மாநிலங்களுக்கு மாறி பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றலாகக் கூடிய வாய்ப்பு இருப்பவர்கள், தங்களுடைய வாகன பதிவு எண்ணையும் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அடிக்கடி இல்லையென்றாலும், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பணிபுரியும் காலத்திற்கு ஏற்ப ஓரிரண்டு முறையாவது மாற்ற வேண்டியிருக்கும். மத்திய அரசு ஆனது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடிய BH பதிவு எண்ணை அறிமுகப்படுத்தியது. அடிக்கடி வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்றாலகக் கூடிய வாய்ப்பு இருப்பவர்கள் இந்த BH (Registration No BH) பதிவு எண்ணைப் பெற்றுக் கொண்டால், அவர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் புதிய பதிவு எண்ணைப் பெறவோ அல்லது கூடுதல் சாலை வரி கட்டவோ தேவையில்லை.

BH பதிவு எண் பெறத் தகுதியானவர்கள் :

குறிப்பிட்ட தகுதியை பெற்றவர்கள் மட்டுமே இந்த BH பதிவு எண்ணைப் (Registration No BH) பெறமுடியும். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு தொடர்பாக பல மாநிலங்களுக்கு மாற்றலாகக் கூடியவர்கள் மற்றும் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அலுவலகம் வைத்திருக்ககூடிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் இந்த BH பதிவு எண்ணைப் பெற தகுதியானவர்கள் ஆவர். இந்தப் பதிவு எண்ணானது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகக் கூடியது.

BH பதிவு எண்ணைப் பெற விண்ணப்பிக்கும் முறை :

இந்த BH பதிவு எண்ணைப் பெற வாகன உரிமையாளர்கள் ஆன்லைனில் தாமே விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்களுடைய கார் டீலர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் எந்த முறையில் விண்ணப்பித்தாலும், அவர்களது பெயரில் படிவம் 20ஐ சமர்ப்பிக்க வேண்டும். வாகன உரிமையாளர்கள் படிவம் 20ஐ மத்திய அரசின் மோட்டார் வாகனத்துறை இணையப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்றால், படிவம் 20 மற்றும் படிவம் 60-ஐயும் சேர்த்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அவர்கள் தங்களது வேலை சான்றிதழ் மற்றும் தங்களுடைய ID Card ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். RTO அதிகாரிகள் BH பதிவு எண்ணைப் பெற தகுதியானர் தானா என்பதை சரிபார்த்த பின், அவர்களுக்கு பதிவு எண் வழங்கப்படும்.

BH பதிவு எண் கட்டணம் செலுத்தும் முறை :

இந்த BH பதிவு எண்ணைப் பெறுவதற்கு (Registration No BH) சாதாரணமாக வாகனத்தைப் பதிவு செய்யும்போது செலுத்தும் கட்டணத்தைப் போலவே வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது,

  • ரூ.10 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான விலை கொண்ட வாகனம் என்றால், வாகன விலையில் 8%.
  • ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் என்றால், 10%.
  • வாகன விலை ரூ.20 லட்சத்திற்கு மேல் என்றால் 12%.

செலுத்த வேண்டியிருக்கும். டீசல் வாகனம் என்றால் 2% கூடுதலாகவும் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என்றால் 2% குறைவாகவும் செலுத்த வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply