Relocation of Electrical Appliances Charge % Reduced : மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டண சதவீதம் குறைக்கப்பட்டது - Tangedco புதிய அறிவிப்பு

Percentage of charges for relocation of electrical appliances reduced தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ஆனது தமிழக அரசின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் :

மின் பயன்பாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல்மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் தான் பிரதானமாக இருக்கிறது. இந்த லிஸ்டில் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், மற்றும் தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு ஆனது மின்சார விநியோக கட்டமைப்பை மேலாண்மை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது Tangedco முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Tangedco-ன் முக்கியமான அறிவிப்பு : Relocation of Electrical Appliances Charge % Reduced

பொதுமக்கள் கடந்த காலத்தில் தங்களது வயல்கள் அல்லது நிலங்களுக்கு அருகே அமைந்துள்ள மின் கம்பம், மின் கம்பி, மின் பாதை, மின் மாற்றி மற்றும் மின் சாதனங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சென்று தங்களது விண்ணப்பித்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்த சமயத்தில் பொதுமக்கள் மொத்த மதிப்பீட்டு தொகையில் 22 சதவீதத்தை செலுத்த வேண்டும். இது ஒரு பெரிய சுமையாக இருப்பதாக பொதுமக்கள் பலரும் கருதி வந்தனர். பொதுமக்கள் அந்த 22 சதவீத மதிப்பீட்டு தொகையை குறைக்க வேண்டி தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வந்தனர்.

இந்த பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த 22 சதவீத மதிப்பீட்டு தொகையை குறைக்க அறிவுறுத்தி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் மதிப்பீட்டு தொகை ஆனது குறைக்கப்பட்டுள்ளது. அதனால் Tangedo தற்போது மின் சாதனங்களை இடமாற்றம் செய்ய வெறும் 5  சதவீத மதிப்பீட்டு தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு தொகை ஆனது கட்டாயம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Tangedco-ன் அறிவிப்பு ஆனது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. 

Latest Slideshows

Leave a Reply