RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

RERA Full Form – Real Estate Regulatory Authority. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (RERA) என்பது இந்திய நாடாளுமன்றத்தால் 2016 ஆம் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். புதிதாக வீடு வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் RERA சட்டம் கொண்டுவரப்பட்டது. மாநிலங்களவையில் RERA மசோதா 2016 மார்ச் 10 அன்று நிறைவேற்றப்பட்டு பிறகு மக்களவையில் 2016 மார்ச் 15 அன்று நிறைவேற்றப்பட்டது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) 2016 மே 1 தேதி அமலுக்கு வந்தது. RERA-வில் உள்ள 92 விதிகளில் 59 விதிகள் 2016 மே 1 தேதி நடைமுறைக்கு வந்தது. மீதமுள்ள விதிகள் 2017 ஆண்டு மே 1 தேதி நடைமுறைக்கு வந்தன.

RERA Full Form & RERA சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது :

  • RERA என்பது Real Estate Regulatory Authority ஆகும். RERA 2016-ன் முக்கிய நோக்கம் வீடு வாங்குபவர்களை பாதுகாக்கவும் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்டது.
  • ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் RERA சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. RERA சட்டத்தின்படி குறைந்தது 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள நிலப்பரப்பு, குடியிருப்பு அல்லது வணிக ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு  RERA-வில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

RERA சட்டத்தின் நோக்கம் :

  • RERA சட்டத்தின் முக்கிய நோக்கம் பிரதமரின் “அனைவருக்கும் வீடு” என்ற தொலைநோக்குப் பார்வையை அடையவும் வீடு வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. மேலும் இந்த சட்டம் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்க உதவுகிறது.

RERA சான்றிதழ் ஏன் முக்கியமானது :

  • சந்தைப்படுத்தல், விளம்பரம், விற்பனை செய்தல், விற்பனைக்கு வழங்குதல் அல்லது எந்தவொரு கட்டிடத்திலும் முதலீடு செய்ய தனிநபர்களை அழைப்பதற்கு முன் RERA-வில் பதிவு செய்வது கட்டாயமாகும். மோசடி அபாயத்தைக் தடுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு RERA சான்றிதழ் முக்கியமானதாகும்.

RERA சட்டத்தின் நன்மைகள் :

  • இந்த புதிய RERA சட்டத்தின் படி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்குள் திட்டத்தை முடிப்பதற்கு டெவலப்பர்களை பொறுப்புடன் வைக்க உதவுகிறது.
  • மேலும் வாங்குபவர்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக RERA சட்டம் மாறியுள்ளது.

தமிழ்நாடு RERA இணையதளம் :

  • https://www.rera.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வீடு வாங்குபவர்கள் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply