Retro Movie Review : ரெட்ரோ திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஜோதிகாவும் சூரியாவும் இணைந்து தங்களது 2D நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தை (Retro Movie Review) இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். லப்பர் பந்து ஸ்வாசிகா சூரியாவின் வளர்ப்புத் தாயாகவும், ஜோஜு ஜார்ஜ் அவரது வளர்ப்புத் தந்தையாகவும் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். கங்குவா தோல்விக்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுக்கு ரெட்ரோ மூலம் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படத்தை வழங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர் அதை முழுமையாகச் செய்யாதது வருத்தமாகிவிட்டது. இந்தப் படம் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு தரமான நிகழ்வா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

ரெட்ரோ கதைக்களம்

ஒரு கிருஷ்ணர் கோவிலில் வாய் பேச முடியாத ஒரு பூசாரி கொலை செய்யப்பட்டு கிடக்க, ​​ஸ்வாசிகா அங்கு இருக்கும் சிறுவனை தனது மகனாக வளர்க்க முடிவு செய்கிறார். ஆனால் அவரது கணவரும் கேங்ஸ்டருமான ஜோஜு ஜார்ஜுக்கு அது சிறிதும் (Retro Movie Review) பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில், ஸ்வாசிகா நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். ஜோஜு ஜார்ஜைக் கொல்ல வரும் நபர்களை ரயிலில் புரட்டி எடுக்கிறார் இளம் வயது பாரிவேல் (சூர்யா), அதன் பிறகு சூர்யாவை தனது மகனாக ஏற்றுக்கொள்கிறார் ஜோஜு ஜார்ஜ். சூர்யாவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு விசித்திரமான பிரச்சனை இருக்கிறது, அதாவது அவருக்கு சிரிக்கவே தெரியாது.

ருக்குமணி (பூஜா) மீதான அன்பின் காரணமாக தனது தந்தைக்கு இரும்புக்கரம் போல செயல்பட்டு எதிரிகளை அடித்து நொறுக்கிய சூர்யா, அதையெல்லாம் விட்டுவிட்டு பூஜா ஹெக்டேவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று கூறுகிறார். ஆனால், இறுதியாக, சூர்யா தனது தந்தை கேட்ட தங்கமீன் கடத்தல் வேலையைச் செய்யாததால் ஏற்பட்ட பிரச்சனையால், ஜோஜு ஜார்ஜ் திருமணத்தில் ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடி பூஜா ஹெக்டேவைக் (Retro Movie Review) கொல்ல முயற்சிக்கிறார். சூர்யா அவரது கையை வெட்டி விட்டு சிறைக்குச் செல்கிறார். சூர்யா மீண்டும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டதால் சூர்யாவை பிரிந்து அந்தமான் செல்கிறார் பூஜா ஹெக்டே இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதையாகும்.

ரெட்ரோ விமர்சனம் (Retro Movie Review)

Retro Movie Review - Platform Tamil

படம் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து கனிமா பாடல் மற்றும் அதனை அடுத்து வரும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியும் ஒரு சிறப்பான சம்பவமாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுக்கு ஒரு சிறந்த படத்தைக் கொடுத்துவிட்டார் (Retro Movie Review) என ரசிகர்கள், பெருமையாக சொல்லும் பகுதியில் ரசிகர்கள் கத்துகிறார்கள், ஆனால் அதைத் தொடர்ந்து சிரிப்பு பகுதியில் படம் மிகவும் பலமாக அடிவாங்கியுள்ளது. ஒரு பக்கம் ஒரு கிளாடியேட்டர் கதையையும், மறுபுறம் கிருஷ்ணர் பிறந்து, மறைந்து, கொடூர கம்சனை வதம் கதையை தளபதி பட பாணியில் உல்டா பண்ணி கார்த்திக் சுப்புராஜ் கொடுத்துள்ளார். இடைவேளைக்கு முன்பு கதை சிறப்பாக இருந்தாலும், அதன்பிறகு ரசிகர்களின் சிரிப்பு அடக்கப்படுகிறது. சூர்யாவின் நடிப்பிற்காகவே இந்த படத்தை கடைசி வரை பார்க்கலாம். கங்குவா படத்தைவிட இந்தப்படம் பெரியதாக போரடிக்கவில்லை.

Latest Slideshows

Leave a Reply