Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம், நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி (Retro Release Date Announced) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா

கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யா பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெற்றியைப் பெறாததால் சூர்யாவுக்கு பெரும் அடி ஏற்பட்டது. சூர்யாவின் OTT வெளியீடுகளான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் அவரது திரையரங்க வெளியீடுகள் வெற்றி பெற்று நீண்ட நாட்களாகிவிட்டது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் தினத்தன்று (Retro Release Date Announced) வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ரெட்ரோ காதல் மற்றும் ஆக்சன் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ரோ திரைப்படம்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் (Retro Release Date Announced) இப்படத்தில் நடித்துள்ளனர். இது சூர்யாவின் 44-வது படம். இப்படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் “Love Laughter War” என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. மேலும், சமீபத்தில் ஒரு பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ், சூர்யா நடிக்கும் படம் ஆக்சன் படம் அல்ல, காதல் கதை என்று கூறியிருந்தார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் தனது படங்களில் ஹீரோக்களை வித்தியாசமாகவும் மாஸாகவும் சித்தரிப்பதில் பெயர் பெற்றவர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சூர்யாவை காதல் படத்தில் காண பல வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்களின் ஏக்கத்தை போக்க ரெட்ரோ படம் உருவாகும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதன்படி ரெட்ரோ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் பாராட்டினர். இதனை பலரும் சமூக வலைதளங்களில் ரீலாக வெளியிட்டனர். சூர்யாவின் கடைசிப் படமான கங்குவா எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ரெட்ரோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ரெட்ரோ ரிலீஸ் தேதி (Retro Release Date Announced)

இந்நிலையில் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ திரைப்படம் அஜித்தின் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி (Retro Release Date Announced) வெளியாகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் பல பெரிய ஹீரோ படங்கள் வெளியாகின்றன. ஏப்ரல் 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மற்றும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையில் ரெட்ரோ படமும் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply